சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்படாது.. மாநகராட்சி அறிவிப்பு!
Meat Shops In Chennai Closed Today | தமிழகத்தில் இன்று (ஜனவரி 16, 2026) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகள் இன்று செயல்படாது என்று சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 16 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (ஜனவரி 16, 2026) திருவள்ளுவர் தினம் (Thiruvalluvar Day) கொண்டாடப்பட உள்ள நிலையில், அது குறித்து சென்னை மாநகராட்சி (Chennai Corporation) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட உள்ளதாகவும், அதற்கு பொதுமக்கள் மற்றும் கடைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று இறைச்சிக் கடைகள் செயல்படாது – ஸ்டிரிக்ட் ஆக சொன்ன சென்னை மாநகராட்சி
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16, 2026 சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் உள்ளிட்ட நான்கு இறைச்சி கூடங்கள் அரசின் உத்தரவின் படி மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இறைச்சி கடை வியாபாரிகள், பொதுமக்கள் அரசின் இந்த உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன தகவல்!
இறைச்சிக் கடைகள் எப்போதெல்லாம் மூடப்படும்
தமிழகத்தை பொருத்தவரை சில பொது விடுமுறை நாட்கள், மத பண்டிகைகளின்போது இறைச்சிக் கடைகள் மூடப்படும். குறிப்பாக ஜெயின், புத்த மத திருவிழாக்கள், வள்ளலார் நினைவு தினம், திருவள்ளுவர் தினம் ஆகிய பொது விடுமுறைகளின் போது இறைச்சிக் கடைகள் மூடப்படும். இறைச்சி சாப்பிடாதவர்களின் மத நம்பிக்கை அவர்களது பண்டிகைகளின் போது காயப்படுத்தாமல் இருக்கும் வகையில் இவ்வாறு இறைச்சிக் கடைகள் மூடப்படும்.
இதையும் படிங்க : சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு… விஜய்யின் வாழ்த்து தேர்தலுக்காக இருக்கலாம் – தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்
அந்த வகையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.