Namakkal: கைவிட முடியாத கள்ளக்காதல்.. தற்கொலைக்கு முயன்ற ஜோடி!
நாமக்கல்லில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் காதலனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினேகா மற்றும் அஜித் ஆகிய இருவரும் ராசிபுரம் அருகே விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற ஜோடி
நாமக்கல், அக்டோபர் 14: நாமக்கல் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் ஒருவர் காதலனுடன் இணைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. வாகன ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு சினேகா என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குழந்தைகளின் கல்விக்காக இவர்கள் இருவரும் காளப்ப நாயக்கன்பட்டி அருகே உள்ள மூன்றாவது மைல் என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கப்பலூத்து கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் அஜித் ஓட்டுநராக உள்ளார். இவர் காளப்ப நாயக்கன்பட்டி அருகே உள்ள புளியங்காடு பகுதியில் வசிக்கும் அவரது சித்தி தீபா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அஜித்துக்கும் சினேகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: 4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சினேகா மற்றும் அஜித் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சினேகா தனது குழந்தைகளுடன் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் இருக்கும் காளிமுத்துவின் தங்கை பரிமளா வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் காளிமுத்து அவரது மனைவி சினேகா மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு முள்ளுக்குறிச்சியில் உள்ள தங்கையின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அதிகாலை 2 மணியளவில் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததை காளிமுத்துவின் தாயார் ஜானகி பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: காதலியை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த காலதன்.. தானும் தற்கொலை!
மீண்டும் அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது சினேகா அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் தனது தாலிக்கொடியை கழற்றி வைத்து விட்டு சென்று மாயமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனால் குடும்பத்தினர் பதறிப் போயினர். இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விஷம் குடித்த நிலையில் சினேகா மற்றும் அவரது காதலன் அஜித் இருவரும் மயங்கி நிலையில் கிடந்தனர்.
அப்போது அந்த வழியாக பூ எடுக்க சென்ற அஜித்தின் தந்தை கந்தசாமி இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் இருவரும் மீட்கப்பட்டு ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.