Madurai Corporation: மதுரை மாநகராட்சியின் வரி முறைகேடு.. மேயரின் கணவரை தூக்கிய போலீஸ்.. அடுத்தடுத்து கைது நடவடிக்கை!

Madurai Mayor's Husband Arrested: மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி மோசடி தொடர்பான விசாரணையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Madurai Corporation: மதுரை மாநகராட்சியின் வரி முறைகேடு.. மேயரின் கணவரை தூக்கிய போலீஸ்.. அடுத்தடுத்து கைது நடவடிக்கை!

மதுரை மேயர் கணவர் பொன் வசந்த்

Updated On: 

13 Aug 2025 06:55 AM

மதுரை, ஆகஸ்ட் 13: மதுரை மாநகராட்சியின் (Madurai Municipal Corporation) பல கோடி ரூபாய் சொத்து வரி மோசடியை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் (Madurai Mayor Husband) பொன் வசந்தை கைது செய்தது. முன்னதாக, கடந்த 2025 மே மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பொன் வசந்த் ‘கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவிலிருந்து (DMK) இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் கைது செய்து செய்யப்பட்ட பொன் வசந்த் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி ஊழல்:

மதுரை மாநகராட்டியில் சுமார் ரூ. 150 கோடி ரூபாய் சொத்து வரியில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2 நிலைக்குழு தலைவர்கள் மற்றும் 5 மண்டலங்களை சேர்ந்த தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தங்களது பதவியினை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ALSO READ: இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்!

மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக மதுரை டி.ஐ.ஜி அபினவ் குமார் தலைமையிலான குழு முழு வீச்சில் விசாரணை நடத்தியது. இதில், ஒரு அதிரடி நடவடிக்கையாகதான் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை காவல்துறையினர் சென்னையில் வைத்து கைது செய்து, விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வந்தனர். இதே வழக்கில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மதுரை மண்டலம் 3ன் உதவி ஆணையராக இருந்த சுரேஷ் குமார், தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். இவரை, காவல்துறையினர் கைது செய்தது.

கைது நடவடிக்கை:


ALSO READ: ‘வேலை நிறுத்தத்தை கைவிடுக.. பணி பாதுகாப்பு 100% உறுதி’ – சென்னை மாநகராட்சி

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக நரிமேட்டை சேர்ந்த போஸ் என்பவரையும் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இதற்கு முன்பு, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, 51வது வார்டு கவுன்சிலரும், வரிவிதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவருமான கே.விஜய லட்சுமியின் கணவரான திமுக உறுப்பினர் கண்ணனையும், 96வது வார்டை சேர்ந்த மாநகராட்டி மசோதா சேகரிப்பாளர் செந்தில் பாண்டியையும் கைது செய்தனர்.