2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு.. எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?

2026 Public holidays: 2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் 5 விடுமுறை நாட்களானது சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. இதனால், பள்ளி மாணவர்களுக்கு ஏமாற்றமாக வார நாட்களில் கிடைக்க வேண்டிய 5 விடுமுறைகள் இந்தாண்டு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு.. எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?

2026 பொதுவிடுமுறை

Updated On: 

12 Nov 2025 07:33 AM

 IST

சென்னை, நவம்பர் 12: 2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் முந்தைய ஆண்டின் இறுதியிலேயே வழங்கப்படும். அந்தவகையில், 2026ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. தலைமைச்செயலர் முருகானந்தம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி 2026ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அரசு துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!

எதெற்கெல்லாம் விடுமுறை:

அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்த மாதம் அதிக விடுமுறை:

அந்தவகையில், ஜனவரி மாதம் 5 நாட்கள் பொது விடுமுறையாகும். மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 3 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி (வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும். தைப்பூசம் மற்றும் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தாம்பரம் – எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

2026 பொது விடுமுறை பட்டியல்:

* ஆங்கில புத்தாண்டு- ஜன.01 (வியாழன்)

*பொங்கல் – ஜன.15 (வியாழன்)

* திருவள்ளுவர் நாள்- ஜன.16 (வெள்ளி)

* உழவர் திருநாள்- ஜன.17 (சனி)

* குடியரசு நாள் – ஜன.26 (திங்கள்)

* தைப்பூசம்- பிப்.01 (ஞாயிறு)

*தெலுங்கு வருட பிறப்பு – மார்ச் 19 ( வியாழன்)

*ரம்ஜான் – மார்ச் 21 (சனி)

*மகாவீரர் ஜெயந்தி – மார்ச் 31 (செவ்வாய்)

*வங்கிகள் ஆண்டு கணக்கு – ஏப்.01 (புதன்)

*புனித வெள்ளி – ஏப்.03 (வெள்ளி)

*தமிழ்புத்தாண்டு – ஏப்.14 (செவ்வாய்)

*மே நாள் – மே 01(வெள்ளி)

*பக்ரீத் – மே 28 (வியாழன்)

*மொகரம் – ஜூன் 26 (வெள்ளி)

*சுதந்திர தினம் – ஆக.15 (சனி)

*மிலாதுநபி – ஆக.26 (புதன்)

*கிருஷ்ண ஜெயந்தி – செப்.04 (வெள்ளி)

*விநாயகர் சதுர்த்தி – செப்.14 (திங்கள்)

*காந்தி ஜெயந்தி – அக்.02 (வெள்ளி)

*ஆயுத பூஜை – அக்.19 (திங்கள்)

*விஜயதசமி – அக்.20 (செவ்வாய்)

*தீபாவளி – நவ.08 (ஞாயிற்றுக்கிமை)

*கிறிஸ்துமஸ் – டிச.25 (வெள்ளி)