100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.. 12 பேர் படுகாயம்!
Kodaikanal Tourist Van Accident | மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று கொடைக்கானலுக்கு சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொடைக்கானல், செப்டம்பர் 15 : கொடைக்கானலுக்கு (Kodaikanal) சென்ற சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த 12 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவை சேர்ந்த 12 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், அவர்கள் கொடைக்கானலுக்கு செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலாவுக்கு வந்த இடத்தில், பள்ளத்தில் வேன் கவிழ்ந்த இந்த விபத்து நடைபெற்றது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது தான் கொடைக்கானல். கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருவது வழக்கம். அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த 12 பேர் கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். வேன் மலை ஏறிக்கொண்டு இருந்தபோது சரியாக மாலை 4 மணி அளவில் கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை பிரிவு அருகே உள்ள வெள்ளப்பாறை என்ற இடத்தில் சுற்றுலா வேன் சென்றுக்கொண்டு இருந்தது. அப்போது வண்டி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது.
இதையும் படிங்க : 2 ஆண்டுகளாக ரூ.1,000.. உத்தர பிரதேச பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை.. அதிர்ச்சி தகவல்
விபத்தில் படுகாயமடைந்த 12 பேர்
வேன் மலை ஏறும்போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அங்கிருந்த 100 அடி பள்ளத்தில் விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளாகியுள்ளது. வேனில் சென்றவர்கள் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர். இந்த நிலையில், பள்ளத்தில் விழுந்த வேன் அங்கிருந்த மரத்தின் மீது மோதி அப்படியே நின்றுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். வேன் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த வேனில் பயணம் செய்த 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் திருட்டு.. மிளகாய் பொடி தூவி கும்பல் அட்டூழியம்.. திருச்சியில் சம்பவம்!
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இந்த சுற்றுலாவை பாஸ்கரன் என்பவர் ஏற்பாடு செய்ததும், அந்த வேனை சென்னையை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் ஓட்டிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நெரில் கண்ட அங்கிருந்த பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.