TVK Vijay: CM சார்.. அவங்க மேல கை வைக்காதீங்க – வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
Karur TVK Rally Stampede: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு, நீங்கள் பழிவாங்க நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என் கட்சியினரை எதுவும் செய்யக்கூடாது என பகிரங்க எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் (Karur TVK Rally Stampede) 41 பேர் உயிரிழந்த 2 நாட்களுக்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், உயிர் இழப்புக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (Tamil Nadu CM MK Stalin) குறிப்பிட்டு, நீங்கள் பழிவாங்க நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என் கட்சியினரை எதுவும் செய்யக்கூடாது என பகிரங்க எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் தவெக தலைவர் விஜய் (TVK Vijay), கரூர் சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்தது என்ன..?
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி மாலை கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் மக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையின்போது விஜய், ஆளுங்கட்சியான திமுகவையும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது, யாரென்று தெரியாத சில மர்மநபர்களால் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக ஒரு சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: 10,000 பேர் வருவார்கள் என கணித்தது தவறு… விஜய் டாப் ஸ்டார் – நீதிபதி சரமாரி கேள்வி
இதன்பிறகு, பவர் கட், ஆம்புலன்ஸ் வருகை உள்ளிட்ட சில காரணங்களாலும் தொண்டர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும், கூட்ட நெரிசலில் மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கு மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தவெக தரப்பில் இது ஆளுங்கட்சியின் சதி என்றும், இந்த பரப்புரையில் போதுமான காவலர்கள் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்த குற்றச்சாட்டை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் நிராகரித்துள்ளது.
முதலமைச்சர் மீது விஜய் குற்றச்சாட்டு:
கரூர் சம்பவம் குறித்து தவெக தலைவர் இன்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்ட வீடியோவில், “ என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வேதனையான சூழ்நிலையை நான் சந்தித்ததில்லை, இது மிகவும் வேதனையானது. என் மீதான நம்பிக்கையாலும் அன்பாலும் மக்கள் அந்த இடத்திற்கு வந்தனர். பாதுகாப்பு தோல்விகளை விசாரிக்க காவல்துறையினரை நான் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. மேலும், உயிர் இழப்பு என்னை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ” என்றார்.
ALSO READ: நண்பர்களே, நம் அரசியல் பயணம் இன்னும் ஸ்டிராங்கா தொடரும்… – முதன்முறையாக மனம் திறந்த விஜய்
கரூர் திரும்ப செல்லாதது குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், “ நான் கரூர் செல்லவில்லை. ஏனெனில் இது மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும். நான் விரைவில் உங்களை சந்திப்பேன். மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க. CM சார்… பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள்” என்றார்.