கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!

Karur Stampede Incident: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சம்பவத்தின்போது, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு போக்குவரத்து உதவி ஆய்வாளர்களிடம் சி. பி. ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், முக்கிய நபர்களிடம் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கரூர் கொடூர சம்பவம்...2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவலர்களிடம் விசாரணை

Published: 

10 Feb 2026 08:45 AM

 IST

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மேற்பார்வை செய்து வருகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சம்பவத்தன்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 2:30 மணி நேரம் நடைபெற்ற இந்த தீவிர விசாரணையில், கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, போக்குவரத்தை சரி செய்யும் பணியில் எத்தனை போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

போக்குவரத்து காவலர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்வி

கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு செல்வதற்காக எத்தனை அவசர ஆம்புலன்சுகள் வந்தன என்பது தொடர்பாக பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பி இருந்தனர். இந்த விசாரணை தொடரும் எனவும், மேலும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடைபெறும் எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரு முறை ஆஜராகி இருந்தார்.

மேலும் படிக்க: குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும்? வெளியான அறிவிப்பு

விஜயின் பிரசார வாகனத்துடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அப்போது, அவரிடம் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றது உங்களுக்கு தெரியுமா. இது குறித்த தகவலை யார் உங்களிடம் கூறியது. உயிரிழப்பு நிகழ்ந்த போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதே போல, விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை அதன் ஓட்டுருடன் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட வேலுசாமிபுரத்துக்கு கொண்டு வந்து வாகனத்தை முன், பின்னாக இயக்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை

இதே போல, அப்போதைய சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் 11 காவலர்களிடம் தனித் தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். தற்போது, கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் பயன்படுத்தி இருந்த பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது இரு போக்குவரத்து காவலர்களிடம் விசாரணையை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

Related Stories
மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?
“இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்” திருப்பூர் ஜவுளி வணிகம் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்!
சென்னையில் ரூ.70.37 கோடியில் புதிய நடைபாதைகள்…6 மண்டலங்களில் அமைக்கப்படுகிறது..எங்கெல்லாம் தெரியுமா!
மகாபலிபுரம்-கொடைக்கானலில் ரோப் கார் சேவை…மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!
சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்.. 2 ஆம் கட்ட பணிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தர்காவில் பக்ரீத்-ரமலான் பண்டிகையில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி…உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்