இந்த மாதம் முதல் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!

magalir urimai thogai: இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, 3 நாட்கள் முன்னதாக டிச.12ம் தேதி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுபட்ட பெண்களுக்கு வரும் டிச.12ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த மாதம் முதல் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

Updated On: 

04 Dec 2025 14:47 PM

 IST

விருதுநகர், டிசம்பர் 04: தமிழகத்தில் இந்த மாதம் முதல் விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த அக்கட்சி, 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. அதிலும், தகுதியுடைய பெண்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் எனக்கூறி லட்சக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, விடுப்பட்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பயனர்களை கண்டறிந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சியினர் உறுதி அளித்து வந்தனர். எனினும், அப்படியும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழுந்தது.

இதையும் படிக்க: “கொஞ்சமா பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர்”.. திமுகவை சரமாரியாக சாடிய விஜய்!!

விதிகளை தளர்த்திய அரசு:

இந்நிலையில், விரைவில் 2026 சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த சமயத்தில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்று எண்ணிய அக்கட்சி, விடுப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 வழங்குவதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிரை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கைகள் எடுத்தனர். இதற்காக, நவ.15ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, வருவாய்த்துறையினர் தீவிரமாக கள ஆய்வு செய்து வந்தனர்.

அதன்படி, அரசு ஊதியம் பெறும் குடும்பம், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து குடும்ப பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் வகையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டு, பெண்களின் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் பணிகள் நடக்கின்றன. இந்த பணி நவம்பரில் முடிவடையும் எனவும் மீண்டும் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

3 நாட்கள் முன்னதாக உரிமைத் தொகை:

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த மாதம் வழக்கத்தை விட 3 நாட்கள் முன்னதாகவே, அதாவது டிச.12ஆம் தேதியே உரிமை தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க:2026ல் மக்களின் ஆதரவுடன் “விஜய் ஆட்சிக்கு வருவார்”.. செங்கோட்டையன் உறுதி!!

விடுபட்டவர்களுக்கும் மகளிர் உதவித்தொகை:

இதுகுறித்து சிவகாசியில் நடந்த திருமண விழாவில் பேசிய அவர், வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விடுப்பட்டவர்களுக்கும் உரிமைத் தொகை வர உள்ளது. அதோடு, வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் தேதியை விட 3 நாட்கள் முன்னதாகவே உரிமைத்தொகை வரவு வைக்கப்பட உள்ளதாக பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி