தை அமாவாசை…ராமேஸ்வரத்துக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Govt Special Buses: தை அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, ராமேஸ்வரத்தில் இருந்தும் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தை அமாவாசை...ராமேஸ்வரத்துக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ராமேஸ்வரத்துக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published: 

17 Jan 2026 10:31 AM

 IST

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 18) தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளன்று பொது மக்கள் கடல், ஆறு, குளம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வர். இதில், குறிப்பாக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்துக்கு வருகை தருவார்கள். அங்கு, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள். இதனால், ராமேஸ்வரத்தில் அதிகளவு பொதுமக்கள் கூட்டம் காணப்படும். இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வர இருப்பதால் அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரத்துக்கு இன்று முதல் சிறப்பு பேருந்து

அதன்படி, இன்று சனிக்கிழமை ( ஜனவரி 17) சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கோயம்புத்தூர், சேலம் மற்றும் கர்நாடக மாநிலம், பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 18) சென்னை கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கோவை, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ!

அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் முன்பதிவு

இந்தப் பேருந்துகளில் பயணிப்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in – என்ற இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ tnstc செல்போன் ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், தை மாதம், புரட்டாசி மாதம் ஆகிய மாதங்களில் வரும் அம்மாவாசைகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொள்வார்கள்.

ராமேஸ்வரத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள்

இந்த 3 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இதற்காக, ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, தற்போதும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்னர் தங்களது சொந்த ஊர்களான சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூருக்கு பொது மக்கள் பயணம் மேற்கொள்வதற்காக எதிர் வழித்தடத்திலும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: தமிழகம் – மேற்கு வங்கம் இடையே 3 அமிர்த் பாரத் ரயில் சேவைகள்.. இன்று முதல் தொடக்கம்.. எந்த வழித்தடங்களில்?

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!