Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்

No Fuel Shortage in Tamil Nadu: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை போதுமான அளவில் இருப்பதாகவும், விநியோகச் சங்கிலி சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 10 May 2025 07:19 AM

தமிழ்நாடு மே 10: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் (War tension between India and Pakistan)  நிலவினாலும், எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியன் ஆயிலும் பாரத் பெட்ரோலியமும் (Indian Oil and Bharat Petroleum) , பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை போதுமான அளவில் உள்ளதாக உறுதியளித்துள்ளன. விநியோக சங்கிலி சீராக இயங்குவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் எரிபொருள் பற்றாக்குறை இல்லையெனவும், வதந்திகளை நம்ப வேண்டாமென இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நிலவி வரும் சூழல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல்கள் நடைபெறும் நிலையில், நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.

போதுமான எரிபொருள் இருப்பு – இந்தியன் ஆயில் விளக்கம்

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் 2025 மே 9ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் எங்கள் நிறுவனத்திடம் போதுமான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி இருப்பு உள்ளது. எங்கள் விநியோகச் சங்கிலி முறையாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பீதியுடன் எரிபொருள் வாங்குவதைக் தவிர்க்க வேண்டுகிறோம். தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்ப்பதன் மூலம் விநியோகம் தடையின்றி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியமும் உறுதியளிப்பு

இதையே ஆதரிக்கும் வகையில் பாரத் பெட்ரோலியமும், “எங்கள் நெட்வொர்க்கில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவை போதுமான அளவில் உள்ளன. நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் பீதி அடைய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலைமை சீராக உள்ளது

தமிழ்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை இருப்பதாக சில வதந்திகள் பரவிய நிலையில், மக்கள் தங்களது வாகனங்களில் அதிக அளவில் எரிபொருள் நிரப்ப ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அதிகாரப்பூர்வமாக, “தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை. எங்களிடம் போதுமான அளவில் இருப்பு உள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம்” என எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் விளக்கம்

நிலைமை சீராகவே உள்ளது – வதந்திகளை நம்ப வேண்டாம்

மே 10, 2025 அன்று தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.80 ஆகவும், டீசல் விலை ரூ.92.49 ஆகவும் உள்ளது. விலைகள் கடந்த சில நாட்களாக சிறிய மாற்றங்களுடன் நிலைத்திருக்கின்றன. எனவே, எரிபொருள் பற்றாக்குறை குறித்து பரவும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?...
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!...
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்...
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்...
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு...
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை...
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்...
ரஜினி படத்தில் பாலகிருஷ்ணா.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாரா?
ரஜினி படத்தில் பாலகிருஷ்ணா.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டாரா?...
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. டிரம்பின் விருப்பம் இதுதான்!
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. டிரம்பின் விருப்பம் இதுதான்!...
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழி அறிவிப்பு..!
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழி அறிவிப்பு..!...