Sellur Raju: எங்கள் கட்சி கொடியவே அதிமுக காரங்க தூக்க மாட்டாங்க.. ஜாலியாக பேசிய செல்லூர் ராஜூ!
TVK Flag at ADMK Meeting: எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொன்னதால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் தவெக கொடியையும் எடுத்து சென்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை, அக்டோபர் 11: கடந்த 2025 அக்டோபர் 9ம் தேதி நடந்த ஒரு அதிமுக (ADMK) பேரணியின்போது, அதிமுக தொண்டர்களில் ஒருவர் தவெக (TVK) கொடியை தூக்கி காட்டினார். இது 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஊகங்கள் எழுந்த நிலையில், ஊடகங்களும் தெரிவித்தது. அப்போது, கூட்டத்தில் உரையாடி கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “கொடி பறக்கிறதா..? பிளையார் சுழிகள் போட்டாச்சு, கூட்டணிகள் அவசியம் என்றாலும், வலுவான கூட்டணி அதிமுக தலைமையில் உருவாகும் கூட்டணியாக இருக்கும்” என்று தெரிவித்தார். இந்தநிலையில், அதிமுக – தவெக கொடி விவகாரம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
ALSO READ: அதிமுக – தவெக கூட்டணி? பாஜகவை கழட்டிவிடும் இபிஎஸ்.. புயலை கிளப்பும் தினகரன்!
கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்த தவெக:
Chemistry Workout 🔥
ADMK–TVK 😍
தலைவர்களே முடிவெடுக்காத நிலையில், இரு கட்சி தொண்டர்களும் ஒரே கூட்டணியாக பயணிக்க தொடங்கிவிட்டனர் 😍😍
இப்படித்தான் அதிமுக–தேமுதிக கூட்டணி 2011ல் உருவானது என்பது வரலாறு. pic.twitter.com/ifoBLtjBYg
— ஜெயம் அசோக் (@JayamAshok15) October 9, 2025
எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொன்னதால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக – தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் தவெக கொடியையும் எடுத்து சென்றனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தவெக, அதிமுக பேரணியுடனோ அல்லது அதிமுகவுடனோ எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ்நாடு முழுவதுமான சுற்றுப்பயணத்தின் போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கட்சிக் கொடிகளை அசைப்பது, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டணியில் கொண்டு வருவதற்கான முயற்சி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதாவது அக்டோபர் 11, 2025 கூறினார்.
ALSO READ: தவெகவுடன் கூட்டணி… அதிமுக பரப்பும் வதந்தி.. போட்டு உடைத்த திருமாவளவன்
செல்லூர் ராஜூ விளக்கம்:
இதுதொடர்பாக இன்று மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார். அதில், “ அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தூக்கியது பற்றி அதிகம் பேசுகிறார்கள். உண்மையை சொல்லவேண்டுமென்றால், அதிமுக காரங்க எங்கள் கட்சி கொடியவே தூக்க மாட்டாங்க. இதில் அடுத்த கட்சி கொடியை பிடித்து அசைப்போமா..? சில நேரங்களில் எங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவே, எங்கள் மாவட்ட செயலாளர்களிடம் கேள்வி கேட்பார்கள். ஏன் பா நம்ம தொண்டர்கள் கொடியே தூக்க மாட்டிக்குறாங்கன்னு. இப்படி எல்லாம் கேள்வி கேட்டு எங்களை கோபப்படுத்தாதீங்க” என்று சிரித்தபடி பதிலளித்தார்.