திருமணத்தை மீறிய தொடர்பு.. காதலியின் கணவர் அடித்துக்கொலை!

Krishnagiri Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் பீகாரைச் சேர்ந்த ராஜா சுகன் என்ற வடமாநில இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். மனைவி கிரண் தனது கள்ளக்காதலன் முகேஷ் உடன் ஊத்தங்கரைக்கு வந்த நிலையில், அவர்களை தேடி வந்த ராஜா சுகனை முகேஷ் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருமணத்தை மீறிய தொடர்பு.. காதலியின் கணவர் அடித்துக்கொலை!

வடமாநில இளைஞர் கொலை

Updated On: 

30 Sep 2025 08:48 AM

 IST

கிருஷ்ணகிரி, செப்டம்பர் 30: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடமாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவிக்கு இருந்த திருமணத்தை மீறிய தொடர்பு தான் காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா சுகன் என்பவர் தனது மனைவி கிரண் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது வீட்டு அருகே வசித்த முகேஷ் என்பவருடன் கிரணுக்கு திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதனை கண்டறிந்த ராஜா சுகன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த கிரண் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரானார்.

கடந்த வாரம் முகேஷூடன் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பீகாரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் இருக்கும் வேலம்பட்டிக்கு வந்தார். அங்கு சக்திவேல் என்பவருக்கு சொந்தமான அரசி ஆலையில் கிரண் மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் கணவன் மனைவி எனக் கூறி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.  இந்த நிலையில் மனைவி ஊத்தங்கரையில் இருப்பதை அறிந்து கொண்ட ராஜா சுகன், அவரையும் குழந்தைகளையும் காண பீகாரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!

செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தனது மனைவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ராஜா சுகன், அங்கு வந்துள்ளார். ஆனால் ஒரு வீட்டில் கிரண் மற்றும் முகேஷ் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அங்கிருந்து மனைவி  கிரண் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராஜா சுகன் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி காலையில் ஆலையின் அருகே இருந்த மாந்தோப்பில் ராஜா சுகன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கல்லாவி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஆலை உரிமையாளரிடம் விசாரித்த போது அவர் முகேஷ் மற்றும் கிரண் ஆகியோர் 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்ததாகவும், முகேஷ் இன்று காலையிலிருந்து வேலைக்கு வரவில்லை எனவும் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரின் செல்போன் எண்ணை வாங்கி அதனை ஆய்வு செய்தனர். அப்போது அவர் கல்லாவியிலிருந்து ஊத்தங்கரைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க: கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று முகேஷை பிடித்து கல்லாவி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் பீகாரில் இருந்த போதே கிரணுக்கும் தனக்கும் இடையே தகாத உறவு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு சரியான வேலை இல்லாததால் குழந்தைகளையும் கிரணையும் அழைத்துக் கொண்டு வேலம்பட்டிக்கு வந்ததாகவும், அரிசி ஆலையில் பணியாற்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் மனைவியை தேடி வந்த ராஜா சுகன் தன்னிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து மாந்தோப்பில் உடலை வீசினேன் என முகேஷ் தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையில் இரண்டு குழந்தைகளுடன் காணாமல் போன கிரணை போலீசார் தேடி வருகின்றனர்.