மனைவி உயிரிழந்த சோகம்.. ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்த முதியவர் விபரீத முடிவு!

Elderly Man Killed Himself | தூத்துக்குடியில் மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த முதியவர் நேற்று (ஜூலை 29, 2025) தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மனைவி உயிரிழந்த சோகத்தில் 60 வயது முதியவர் தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி உயிரிழந்த சோகம்.. ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்த முதியவர் விபரீத முடிவு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Jul 2025 09:09 AM

தூத்துக்குடி, ஜூலை 20 : தூத்துக்குடியில் (Tuticorin) மனைவி உயிரிழந்த சோகத்தால் மன அழுத்தத்தில் இருந்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி உயிரிழந்த நிலையில், ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்த அந்த முதியவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். முதியவரின் இந்த முடிவு அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியின் இழப்பை தாங்க முடியாத கணவன் – தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். 60 வயதான அவருக்கு காசி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்த நிலையில், மகன் திருமணம் ஆகி நேரு காலனியில் தனி குடித்தனம் நடத்தி வருகிறார். இதே போல இவரது மகளும் திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் குணசேகரின் மனைவி காசி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

இதையும் படிங்க : காதலுடன் செல்போனில் பேச்சு: தாலியை கழற்றி வெளியேறிய புதுப்பெண்: கடலூரில் பரபரப்பு

தனிமையில் வாழ்ந்து வந்த குணசேகரன் விபரீத முடிவு

இதன் காரணமாக அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். மனைவி இறந்ததும் குணசேகரன் தனிமையில் வாழ தொடங்கியுள்ளார். மனைவியின் பிரிவும், தனிமையும் அவரை கடும் மன அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று (ஜூலை 19, 2025)  மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : பிரசவமா? பயத்தில் மர்மமான இளம்பெண்.. அடுத்து என்ன? ஈரோட்டில் நடந்த சம்பவம்!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

குணசேகரன் வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குணசேகரன் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவில் இறந்த சோகத்தில் தனிமையில் தவித்து வந்த முதியவர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.