” 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாய் தவற விட்டீர்களே” – எடப்பாடி பழனிசாமி பேச்சு..
Edappadi Palnisamy Campaign: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் மனநிறைவு அடையும் வரையில் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாயை தவிற விட்டீர்களே என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
எடப்பாடி பழனிசாமி: அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் தான் திமுக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அமல்படுத்தியது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் குடும்ப ஆட்சியாக இல்லாமல் மக்களுக்கான ஆட்சியாக வரும் 2026 சட்டமன்ற தேர்தல் இருக்கும் எனவும் தனது பிரச்சார பயணத்தின் போது பேசி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை ஒவ்வொரு கட்சிகள் தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் ஏற்கனவே பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி:
2025 ஏப்ரல் மாதம் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் வருகை தந்த பொழுது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் அண்ணாமலை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தது. ஆனால் மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணம்:
தேர்தலை சந்திக்க ஆயத்தமாக இரண்டு கட்சிகளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது அதில் குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன் முதல் கட்டமாக ஜூலை 7 2025 அன்று தனது முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
Also Read: அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது… ரஜினிகாந்த் அதிரடி !
அதன் ஒரு பகுதியாக ஜூலை 11 2025 அன்று விழுப்புரத்தில் பேசிய அவர், ”அதிமுக தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் திமுக மாதம் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்த செயல்படுத்தி வருகிறது.
அதிமுக ஆட்சி குடும்ப அரசியலாக இருக்காது:
ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சோதனைப் பட்டியல்!#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்#EPSfor2026 pic.twitter.com/eUMrIPE2yC
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 11, 2025
அதிமுக ஆட்சிய என்பது மக்களுக்கான ஆட்சி, குடும்ப ஆட்சியாக இருக்காது. திமுக அரசை பொருத்தவரையில் தனது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். வேறு யாரும் முதலமைச்சராகவோ, பதவிக்கு வர முடியாது. முதலில் கலைஞர் கருணாநிதி இருந்தார், அதனை தொடர்ந்து தற்போது ஸ்டாலின் இருக்கிறார், பின்னர் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் இருக்கிறார், கடைசியாக அந்த வரிசையில் இன்பநிதியும் தற்போது சேர்ந்துள்ளார்.
Also Read: திருமலா பால் மேலாளர் கொலையா? விசாரணை வளையில் துணை ஆணையர்.. பின்னணி என்ன?
ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாயை தவிற விட்டீர்களே:
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் மனநிறைவு அடையும் வரையில் உரிமை தொகை வழங்கப்படும். ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1500 ரூபாயை தவிற விட்டீர்களே. தண்ணி வரி கட்டினால் தான் 100 நாள் வேலை திட்டம் என தெரிவித்திருப்பது, கொடுப்பது 100 ரூபாய் பிடுங்குவது 2000 ரூபாய் போல இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் 524 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அதில் 75 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் சொல்லிக் கொண்டிருக்கிறது” என பேசி உள்ளார்