சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடக்கம்.. கட்டணம் மற்றும் வழித்தடம்.. முழு விவரம்..

Double-decker bus service begins in Chennai: 1970களில் இந்த பேருந்துகள் இயங்கிய போது, பலர் இதனை மாடி பேருந்து என்றும் அழைத்து வந்துள்ளனர். அப்போதும், 1980களில் இதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், 1997ல் தான் மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, 2008ம் ஆண்டு வரை மீண்டும் சென்னையை இப்பேருந்துகள் வலம் வந்துள்ளன.

சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடக்கம்.. கட்டணம் மற்றும் வழித்தடம்.. முழு விவரம்..

இன்று முதல் டபுள் டக்கர் பேருந்து சேவை

Updated On: 

24 Jan 2026 10:21 AM

 IST

சென்னை, ஜனவரி 24: சென்னையில் இன்று முதல் டபுள் டக்கர் (Double Decker) பேருந்து சேவை தொடங்குகிறது. கடந்த 12ம் தேதி இந்த பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்த நிலையில், இன்று முதல் அவை பயன்பாட்டிற்கு வருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் ரூ.1.8 கோடி மதிப்பிலான டபுள் டக்கர் பேருந்து தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னையில் கடந்த 1970களில் டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த இந்த பேருந்து சேவையானது கடந்த 2008ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க : சென்னை தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் அனுமதி…அடையாள அட்டை கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

10 ஆண்டுகளில் நிறுத்தப்படும் சேவை:

1970களில் இந்த பேருந்துகள் இயங்கிய போது, பலர் இதனை மாடி பேருந்து என்றும் அழைத்து வந்துள்ளனர். அப்போதும், 1980களில் இதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், 1997ல் தான் மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, 2008ம் ஆண்டு வரை மீண்டும் சென்னையை இப்பேருந்துகள் வலம் வந்துள்ளன. பின்னர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அதன் சேவை நிறுத்தப்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அவ்வாறு, மீண்டும் தொடங்கப்படும் இந்த பேருந்து சேவை, இம்முறை வழக்கமான பயணிகள் பயணத்திற்கும் சுற்றுலா பயணத்திற்கும் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயணிகளுக்கும், சுற்றுலாவுக்கும்:

முதல் கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் 20 இரட்டை அடுக்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வார நாட்களில் பயணிகளுக்காகவும், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மின்சார பேருந்துகளை விட ஒன்றரை மடங்கு அதிகளவிலான பயணிகளை இந்த பேருந்துகள் ஏற்றுச் செல்ல உள்ளது.

டபுள் டக்கர் பேருந்து வழித்தடம் மற்றும் கட்டணம்:

முதல்கட்டமாக சென்னையில், முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின் படி, TTDC தலைமையகத்தில் இருந்து புறப்படும் இப்பேருந்து, LIC – ஸ்பென்சர் பிளாசா – மக்கா மஸ்ஜித் –  பல்லவன் சாலை – பாடிகார்டு முனீஸ்வரர் கோவில் – ராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை உயர்நீதிமன்றம் – தலைமைச் செயலகம் – ரிசர்வ் வங்கி – சென்னை துறைமுகம் – வெற்றி போர் நினைவுச்சின்னம் – நேப்பியர் பாலம், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள், மெரினா கடற்கரை – கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் கடற்கரை – சாந்தோம் தேவாலயம் – அகில இந்திய வானொலி – கலங்கரை விளக்கம் – காவல்துறை தலைமை அலுவலகம் – குயின் மேரீஸ் கல்லூரி – விவேகானந்தர் இல்லம் – பிரெசிடென்சி கல்லூரி – எழிலகம் – சென்னை பல்கலைக்கழகம் – தூர்தர்ஷன் கேந்திரா – இராஜாஜி மண்டபம் – ஓமந்தூரார் அரசு மருத்துவமனை – TTDC தலைமையகம் ஆகிய வழித்தடங்களில் இயங்க உள்ளது.

இந்த பேருந்துகளில் சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.200ம் சிறியவர்களுக்கு ரூ.150ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : தைப்பூசம்: மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு..என்ன அது!

டபுள் டக்கர் பேருந்தின் சிறப்புகள்:

இந்தப் பேருந்தானது சிகப்பு நிற வண்ணத்தில், முழுவதும் ஏசி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாகக் காணும் வகையில் கண்ணாடிகள் ஜன்னல்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, இந்த பேருந்தில் மேல் தளத்தில் பனோரமிக் (Panoramic) பார்வை வசதியும் உள்ளது. இதன் மூலம், பேருந்து செல்லும் பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் உள்ளிருந்த வாரே பார்த்துக் கொண்டே செல்லலாம்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..