GPay பயன்டுத்துகிறீர்களா? உஷார்.. ரூ.2 லட்சம் அபேஸ்.. எச்சரிக்கும் போலீசார்!!
Do you use GPay then beware: அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. தினேஷ் அந்த ரூ. 2 லட்சத்தை தனது இரண்டு நண்பர்களின் 'ஜிபே' கணக்குகளுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவரான பாஸ்கர், ரூ. 90,000 பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

மாதிரிப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 05: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காவலாளியின் கைபேசியைத் திருடி, ‘ஜிபே’ மூலம் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் கைபேசி, யூபிஐ ஆப், பின் எண் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் தவறாகப் போனால், வங்கி கணக்கில் உள்ள பணம் நொடிகளில் வேறு ஒருவரின் கைக்குச் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ரொக்கம் இல்லாமல் பரிவர்த்தனை செய்வது எளிதாக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பு கவனக்குறைவாக இருந்தால் அது பெரிய நிதி இழப்பாக மாறும்.
மேலும் படிக்க: ஆர்டிஓ செல்லானில் இப்படியொரு மோசடியா? லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விவசாயி..தஞ்சாவூரில் சம்பவம்!
காவலாளியின் போன் திருட்டு:
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேனிங் மையத்தில் நாகலிங்கம் (58) என்பவர் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 25-ஆம் தேதி, அவரது பணியில் இருந்தபோது, அவரது கைபேசி திருடப்பட்டது. இது தொடர்பாக நாகலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, மதப்படகாவல்துறையின் விசாரணையில், அதே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணிபுரியும், நாகலிங்கத்திற்கு நன்கு அறிமுகமான ரேவதி (39) மற்றும் உமா மகேஸ்வரி (38) ஆகியோர்தான் கைபேசியைத் திருடியது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
Gpay மூலம் ரூ.2 லட்சம் அபேஸ்:
காவலாளி நாகலிங்கத்தின் கைபேசியில் இருந்த ‘ஜிபே’ கணக்கைப் பயன்படுத்தி, தினேஷ் என்ற நபரின் உதவியுடன் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. தினேஷ் அந்த ரூ. 2 லட்சத்தை தனது இரண்டு நண்பர்களின் ‘ஜிபே’ கணக்குகளுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவரான பாஸ்கர், ரூ. 90,000 பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறை தேடி வருகிறது. மற்றொரு நண்பரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரூ. 92,000 பணத்தையும் காவல்துறை வங்கியின் மூலம் முடக்கியுள்ளது.
மேலும் படிக்க: சட்டவிரோத ஊடுருவல்…வங்கதேசத்தினர் 24 பேர் கைது…மாநிலம் முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை!
போலீசார் விடுத்த எச்சரிக்கை:
துப்புரவுப் பணியாளர்களான ரேவதி, உமா மகேஸ்வரி மற்றும் தினேஷ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 18,000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு கைபேசி மீட்கப்பட்டது. ‘ஜிபே’ கணக்குகள் மூலம் பணத்தை மோசடி செய்யும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. எனவே, ‘ஜிபே’ கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.