‘அதிமுக உடனான கூட்டணியால் அதிருப்தி’.. திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்..

AMMK Deputy General Secretary Manickaraja joins DMK: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

‘அதிமுக உடனான கூட்டணியால் அதிருப்தி’.. திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்..

மாணிக்கம் ராஜா

Updated On: 

23 Jan 2026 11:05 AM

 IST

சென்னை, ஜனவரி 23: டிடிவி தினகரனின் அமமுக துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா இன்று தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 3 அமமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுத்தவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதையும் படிக்க : ஜன.25ல் மாமல்லபுரத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்.. பங்கேற்கிறார் விஜய்..

NDA கூட்டணியில் இணைந்த அமமுக:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுத்தவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தினகரன் அறிவித்தார். இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இடம் பெறுவதாக அறிவித்தார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் இன்றைய கூட்டத்திலும் டிடிவி தினகரன் பங்கேற்க உள்ளார்.

திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்:

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்ததற்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை அக்கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்குவதாக இன்று காலை அறிவித்தார். அதே நேரத்தில் சென்னையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அதேபோல அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

அமமுக பழைய நிலைக்கு சென்றது:

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கராஜா, தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

நிர்வாகிகள் பேச்சை கேட்காத தினகரன்:

மேலும், நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அமமுக தலைமை கேட்கவில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி திமுகவில் இணைந்துள்ளோம். தற்போது அமமுகவை சேர்ந்த 3 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அமமுக உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம் என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்த மேலும் சில கட்சிகள்.. பியூஷ் கோயல் வெளியிட்ட அறிவிப்பு..

ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில் அமமுகவில் இருந்து மாணிக்கராஜாவும் திமுகவில் இணைந்துள்ளார்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..