எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லையா முதல்வர் விஜய்? நடந்தது இதுதான்!

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அதிமுகவின் ஒரு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்க்கு பின்னால் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வணங்கியதாகவும், முதல்வருக்கு வணக்கம் வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லையா முதல்வர் விஜய்? நடந்தது இதுதான்!

கோப்பு புகைப்படம்

Published: 

11 May 2026 22:35 PM

 IST

சென்னை, மே 11, 2026: தமிழகத்தின் பதினேழாவது சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் இது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 234 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொருவராக பதவியேற்றுக்கொண்டனர்.

அப்போது ஒவ்வொருவரும் பதவியேற்றுக்கொள்வதற்கு முன்னரோ அல்லது பின்னரோ தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை நோக்கி வணக்கம் தெரிவித்து, ஒரு சிலர் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கவில்லையா?

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு முதல்வர் விஜயை நோக்கி வணக்கம் தெரிவித்தார். ஆனால், பதிலுக்கு விஜய் வணக்கம் தெரிவிக்காமல் அமர்ந்திருந்தார். இது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது.

உண்மையில் நடந்தது என்ன?

இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அதிமுகவின் ஒரு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்க்கு பின்னால் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை வணங்கியதாகவும், முதல்வருக்கு வணக்கம் வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் படிக்க: பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி..

சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பேரவை கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து வெளியே வந்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது “அதிமுக இரண்டாகப் பிரிகிறதா?” என கேட்டபோது, “தவறான தகவல்” என குறிப்பிட்டு சென்றார்.

Follow Us
Related Stories
தூத்துக்குடியில் போலீசார் தீவிர சோதனை.. மது போதையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர்கள் தப்பி ஓட்டம்!
பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி..
முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏக்கள்.. வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்கள்..
முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு.. மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு..
விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது.. கார் வரை சென்று முதல்வர் விஜய்யை வழி அனுப்பிய வைகோ..
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி