தருமபுரியில் கொடூர விபத்து…சாலையில் சிதறிய மனித உறுப்புகள்…இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேர்!

Dharmapuri Thoppur Kanavai Road Accident: தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள நெடுச்சாலையில் நடைபெற்ற கொடூர சாலை விபத்தில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் சிதறி கிடந்த மனித உறுப்புகளை போலீசார் சேகரித்தனர்.

தருமபுரியில் கொடூர விபத்து...சாலையில் சிதறிய மனித உறுப்புகள்...இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேர்!

தொப்பூர் கணவாய் சாலை விபத்து

Published: 

16 Dec 2025 12:30 PM

 IST

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியானது அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறும் இடமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள அபாயகரமான வளைவில் அதிவேகமாக செல்லும் கார், பைக், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) கொடூர விபத்து ஒன்று நடைபெற்றது. பெங்களூர்- சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள சாலையில், பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பகுதியில் புதூர் பிரிவு சாலை அருகே கண்டெய்னர் லாரி சென்ற போது, எதிர்பாராத விதமாக திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் மீது பயங்கரமாக மோதியது.

பை, காரை இடித்து இழுத்து சென்ற லாரி

இந்த கொடூர விபத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் சில அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இதில், பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மற்றும் காரில் பயணித்த நபர் என 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பைக்கில் சென்ற நபர் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தில் அந்த சாலை முழுவதும் உயிரிழந்த 3 பேரின் உடல் உறுப்புகள் சிதைந்து ஆங்காங்கே சிதறி கிடந்தன.

மேலும் படிக்க: உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5000 அபராதம்.. 15 குழுக்களை அமைத்த சென்னை மாநகராட்சி..

கொடூர சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடல் கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயமடைந்த 4 பேர் அதை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலையில் சிதறி கிடந்த மனித உறுப்புகள் சேகரிப்பு

சாலையில் சிதறி கிடந்த உடல் உறுப்புகளை போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் உடல் கூறாய்வுக்காக பிளாஸ்டிக் கவர்களில் சேகரித்து சென்றனர். தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்துகளில் இந்த விபத்தானது மிகவும் கொடூர விபத்தாக பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுப்பதற்காக ரூ.900 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான் கணிப்பது என்ன?

எச்1பி விசாதாரர்களின் கணவன், மனைவிகளை பாதிக்கும் அமெரிக்க அரசின் புதிய விதி - செனட்டர்கள் எதிர்ப்பு
சீன எல்லையில் விபத்துக்குள்ளான லாரி - 21 பேர் பலி
பீகாரில் ரயிலில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த பெண்