டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
Delta Districts will Have Moderate Rain Today | தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வானிலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 18 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (மார்ச் 18, 2026) முதல் மார்ச் 20, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வானிலை நிலவரம் என்ன?
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சியும், வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Tamil Nadu Election: ஜி பே ட்ரான்ஸ்ஃபரில் வாக்கு வேட்டை: வங்கிகளுக்கு கடும் அலர்ட்..!
டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையன் கூறியுள்ளது.