இம்மாத இறுதியில் வங்கக் கடலில் உருவாகும் ‘சென்யார் புயல்’.. தமிழகத்தை தாக்குமா?

Cyclone Senyar: அந்தவகையில், ‘மோந்தா’ புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்து வரும் புயலுக்கு 'சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப்பெயரை ஐக்கிய அரபு அமீரகம் சூட்டியுள்ளது. இம்மாத இறுதியில் இந்த சென்யார் புயல் தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இம்மாத இறுதியில் வங்கக் கடலில் உருவாகும் ‘சென்யார் புயல்’.. தமிழகத்தை தாக்குமா?

சென்யார் புயல்

Updated On: 

21 Nov 2025 13:53 PM

 IST

சென்னை, நவம்பர் 21:மோந்தா புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்து உருவாக இருக்கும்,சென்யார்புயல் தமிழக கடற்கரையைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்.16ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதனிடையே, வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் அக்டோபர் மாத இறுதியில், ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்தது. இதையொட்டி, தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்ததது. அதன்பின், நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. இதனிடையை, கடந்த ஒரு வாரமாக 3வது சுற்று வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமெடுத்து டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தந்தது. தொடர்ந்து, தற்போது 4வது சுற்று வடகிழக்கு பருவமழை, தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

காற்றழுத்த தாழ்வு நிலை:

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கூறியதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இந்த காற்று சுழற்சியுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புயல் எப்போது உருவாகிறது?

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.25ல் லச்சத்தீவு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, நகர்ந்த பின் தான் காற்றழுத்த பகுதி வலுவடையும், அதன்படி நவ.23 அல்லது 24ல் தெற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி படிப்படியாக வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்பு அதிகம்:

‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தமிழக கடற்கரையை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்கிறது. எனினும், அதன் தீவிரம் மற்றும் கரையை கடக்கும் இடம் குறித்து இப்போதே துல்லியமாக கணிக்க முடியாது. தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, அடுத்த 2-3 நாள்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலை நோக்கி நகரக்கூடும்.

இதையும் படிக்க: Rain Alert: தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு:

இது நவம்பர் 22-23க்குள் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, நாளை முதல் அடுத்த 3-4 நாள்களுக்கு தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?