கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் யானை.. பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு!
Wild Elephant Issue In Cuddalore | கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. இந்த நிலையில், ஊருக்குள் புகுந்த யானை அங்கிருந்த பொதுமக்களை மிகவும் ஆக்ரோஷமாக துரத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி, டிசம்பர் 09 : கடலூர் (Cuddalore) நகராட்சி பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த பகுதியில் இருக்கும் சாலைகளில் அந்த யானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 27, 2025 அன்று கே.கே.நகர், மேல் மற்றும் நடு கூடலூர், கெவிப்பாரா, கோத்தர், தோட்டமூழா உள்ளிட்ட பகுதிகளில் அந்த யானை உலா வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானை
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் அந்த யானை, அந்த பகுதியில் பயிரடப்படும் வாழை, பாக்கு, பயிர்களை சாப்பிட்டு வரும் நிலையில், அந்த பகுதியிலே அது முகாமிட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வனத்துறை அந்த யானையை காட்டு பகுதிக்குள் அனுப்பி வைத்தாலும், அந்த யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே வந்து விடுகிறது. இவ்வாறு அதே பகுதியில் பல நாட்களாக அந்த யானை சுற்றித் திரிந்துள்ளது.
இதையும் படிங்க : பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!
இதற்கிடையே டிசம்பர் 06, 2025 அன்று இரவு சரியாக 9.50 மணி அளவில் அந்த யானை கூடலூர் ஓ.வி.எச் சாலையில் திடீரென நடந்து வந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஓடிச்சென்று வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் தாங்கள் வந்த வழியே மீண்டும் சென்றுள்ளனர். இந்த நிலையில், தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த காட்டு யானை அங்கு செல்ல இடமில்லாததால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே திரும்பியுள்ளது.
இதையும் படிங்க : போலி மருந்து விவகாரம்…தமிழகத்தில் 34 மருந்தகளை ஆய்வு செய்ய உத்தரவு!
மிகுந்த ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை துரத்திய யானை
அங்கிருந்து திரும்பி வந்த யானை சாலையில் பொதுமக்கள் இருப்பதை கண்ட நிலையில் திடீரென மிகுந்த ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை துரத்தியுள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி தங்களது வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் கடும் அச்சத்தில் உறைந்துள்ள அந்த சுற்று வட்டார கிராம் மக்கள் யானையை குடியிருப்பு பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.