Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டாஸ்மாக்கில் கூடுதலா ரூ.10 வசூல்… வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Consumer Court Verdict: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை வாடிக்கையாளருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டாஸ்மாக்கில் கூடுதலா ரூ.10 வசூல்… வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Nov 2025 20:30 PM IST

சென்னை, நவம்பர் 11 : சென்னையில் (Chennai) உள்ள நுகர்வோர் நீதிமன்றம், மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்ததற்காக மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் (TASMAC) மதுபான கடைகள் இயங்கிவருகின்றன. மாநில அரசின் முதன்மை வருவாய்துறை மூலமாக டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. எனினும், இக்கடைகளில் அதிகபட்ச விலையான எம்ஆர்பியை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்

இந்த நிலையில், சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்ற நபர், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியபோது, விற்பனையாளர் ரூ.10 கூடுதலாக வசூலித்ததாகக் கூறி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  அவர் தனது மனுவில், மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட வாடிக்கையாளரிடம் கூடுதலாக சட்ட விரோதமாக வசூலித்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!

மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள்,  மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி வசூலித்தது ஒரு நியாயமற்ற வணிக நடைமுறைஎனக் கூறியதோடு, இதனால், மாதவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு ரூ.5,000 இழப்பீடு தொகையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டனர். மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், அதற்கான தொகையை 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதேபோல் மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலித்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், டாஸ்மாக் கடைகளில் அதிக விலை வசூல் செய்வதற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருவது தெளிவாகிறது.

இதையும் படிக்க : கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 2 சிறுமிகள்.. பத்திரமாக மீட்ட போலீசார்!

கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க புதிய நடைமுறை

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.  நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடு என்ற புதிய முறையை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் டிஜிட்டல் முறயைில் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே பணம் செலுத்தும் வகையில் டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும். எனவே பாட்டிலுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.