கோவை மக்களுக்கு அலர்ட்… முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. எங்கெங்கு தெரியுமா?

Coimbatore Traffic Diversion : கோவை மாவட்டத்தில் 2025 ஜூலை 5ஆம் தேதியான நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இஸ்கான் கோயில் தேர் திருவிழாவையொட்டி, 2025 ஜூலை 5ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் எங்கெங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு செல்ல வேண்டும்.

கோவை மக்களுக்கு அலர்ட்... முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்.. எங்கெங்கு தெரியுமா?

கோவையில் போக்குவரத்து மாற்றம்

Updated On: 

04 Jul 2025 10:54 AM

கோவை, ஜூலை 04 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2025 ஜூலை 5ஆம் தேதியான நாளை போக்குவரத்து மாற்றம் (Coimbatore Traffic Diversion) செய்யப்பட்டுள்ளது. இஸ்கான் கோயில் தேர்வு திருவிழாவை முன்னிட்டு, 2025 ஜூலை 5ஆம் தேதியான நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோயம்புத்தூர் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக முக்கிய நகரமாக இருப்பது கோயம்புத்தூர். சென்னைக்கு இணையாக கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் கோவை முன்னேறி வருகிறது. கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் போக்குவரத்து மாற்றம்

அதே நேரத்தில், கோவையில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உள்ள்து. மக்கள் தொகை அதிகரிக்க, வாகனங்களின் எண்ணிக்கையில் உயர்ந்து போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது. அவ்வப்போது, சாலை விரிவாக்கம், மெட்ரோ பணிகள் போன்ற காரணங்களால் போக்குவரத்து மாற்றமும் மாநில போக்குவரத்தை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், 2025 ஜூலை  5ஆம் தேதியான நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது, கோவை மாவட்டத்தில் 2025 ஜூலை 5ஆம் தேதியான நாளை இஸ்கான் கோயில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும். எனவே, மாநகர காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளது. அதன்படி, 2025 ஜூலை 5ஆம் தேதியான நாளை நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

எங்கெங்கு தெரியுமா?

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேரூர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் செட்டி தெரு மற்றும் ராஜா தெரு வழியாக நகரத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. அவ்வழியாக வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா மற்றும் பேரூர் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும்.

வைசியாள் தெரு மற்றும் செட்டி தெரு வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் – பேரூர் பைபாஸ், அசோக் நகர் ரவுண்டானா, சேதுவாய்க்கால் சோதனைச் சாவடி, சிவாலய சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும்.

மருதமலை மற்றும் தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு தெரு வழியாக நகருக்குள் வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வழியாக வரும் வாகனங்கள், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி ரோடு, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.

உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம், தடகம், மருதமலை செல்லும் வாகனங்கள் ஒப்பணகார தெரு வழியாக பேரூர் புறவழிச்சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சேதுமாவாய்க்கால் சோதனைச்சாவடி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி தெரு, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம், காந்தி பூங்கா வழியாக செல்ல வேண்டும்.

சுக்ரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகி குமரன் தெரு வழியாக ராஜா தெருவுக்கு வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படாது. மேலும், தேர் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை ராஜா தெருவில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.