மிரண்ட சென்னை ஏர்போர்ட்… ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.. சிக்கிய கென்யா இளைஞர்!
Chennai Cocaine Seized : சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புடைய கொக்கைன் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கென்யா நாட்டைச் சேர்ந்த இளைஞர் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போதைப் பொருள் பறிமுதல்
சென்னை, செப்டம்பர் 18 : எத்தியோப்பியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருளை கடத்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைதாகி உள்ளார். தலைநகர் சென்னையில் உள்ள விமான நிலையம் எப்போதுமே பரப்பாகவே இருக்கும். இங்கு பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் எப்போதும் சோதனைகள் தீவிரமாக இருந்து வருகிறது. இருப்பினும், கஞ்சா உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்களும் கடத்தி வரப்படுகிறது. நூதன முறையில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது.
இதனை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வெளிநாட்டில் இருந்து ரகசியாக சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, சென்னை விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது, 2025 செப்டம்பர் 2ஆம் தேதி எத்தியோப்பியா விமானத்தில் பயணித்த இரண்டு பேர் ரூ.60 கோடி மதிப்பில் 5.618 கிலோ போதைப் பொருளை சென்னைக்கு கடத்தி வந்தனர். இதனை அறிந்த அதிகாரிகள், போதைப் பொருளை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.
Also Read : திருமணம் செய்வதாக மோசடி.. குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே மற்றொரு சம்பவம் சென்னை விமான நிலையத்தில் அரங்கேறி இருக்கிறது. அதாவது, 2025 செப்டம்பர் 17ஆம் தேதியான நேற்று சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனையிலும், கண்காணிப்பையும் நடத்தினர். எத்தியோப்பியாவில் இருந்து வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும்படி நடந்து கொண்ட ஒருவரை போலீசார் இடைமறித்து விசாரணைக்கு அவரை அழைத்து சென்றனர். எங்கிருந்து வருகிறீர்கள் போன்ற கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
Also Read : கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. தவாக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை.. அதிர்ச்சி பின்னணி
அதற்கு அவர் முரணான பதில்களை தெரிவித்து இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது, அவரது பையில் சாக்லேட் போன்று இருந்தது. இதனை திறந்து பார்த்ததில், அதில் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்ட கடத்தி வரப்பட்டுள்ளது. அதில், ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருளை கடத்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் (28) கைது செய்தனர்.