என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மக்களுக்கான புதிய அறிவிப்புகள் தினசரி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணி அளவில் நடைபெற இருக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

கோப்பு புகைப்படம்
விழுப்புரம், பிப்ரவரி 4, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஆளும் திமுக ஆட்சி தரப்பில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ‘உங்கள் கனவு’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 4, 2025 தேதியான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஆளும் திமுக எப்படியாவது அடுத்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
திமுகவைப் பொருத்தவரையில், கூட்டணியில் எந்தவொரு மாற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான பணிகளும் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: சேலத்தில் மக்களை சந்திக்கும் விஜய்.. எப்போது? அனுமதி கேட்டு கடிதம்..
என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்:
தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், மக்களுக்கான புதிய அறிவிப்புகள் தினசரி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணி அளவில் நடைபெற இருக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் ‘என் கனவு, என் எதிர்காலம்’ என்ற புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
அத்துடன், ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: விமான பயணிகளுக்கு குட் நியூஸ்…சென்னை டூ திருச்சி-மதுரைக்கு சிறிய ரக விமான சேவை தொடக்கம்!
முதல்வரின் திட்டப்பயணம் என்ன?
அதேபோல், நிறைவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் முதலமைச்சர் நாட்டுகிறார். செஞ்சி சாலையில் உள்ள கொள்ளார் கிராமத்தின் சிப்காட் வளாகத்தில் இந்த அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் வகையில் ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதள சேவையையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், வேளாண்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. திண்டிவனம் வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அங்கு திமுகவினர் தரப்பில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இன்று பிற்பகல் மீண்டும் சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.