உமன் பவரால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.. மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..

CM MK Stalin Speech: முதல்வராக பொறுப்பேற்றதும் தனது முதல் கையெழுத்து ‘விடியல் பயணம்’ திட்டத்துக்காகத்தான் இருந்ததாகவும், புதிய வாய்ப்புகளைத் தேடி பெண்கள் ஏராளமானோர் இந்த விடியல் பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார் என மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

உமன் பவரால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.. மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..

கோப்பு புகைப்படம்

Published: 

29 Dec 2025 21:00 PM

 IST

கோவை, டிசமபர் 29, 2025: திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், மகளிர் அணி மாநாட்டில் கூடியுள்ள கூட்டம் பவர்ஃபுல்லாக மட்டுமல்லாமல், உமன் பவரால் மீண்டும் ஆட்சிக்கு வருவதைச் சுட்டிக்காட்டுவதாக இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்கான பணிகளை மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் என அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 29, 2025 தேதியான இன்று, மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மகளிர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க: ராமதாஸ் நடத்தியது பொதுக்குழு அல்ல…அது ஒரு கேலிக் கூத்து…வழக்கறிஞர் பாலு அதிரடி!

அடுத்த ஆண்டு ஆட்சி அமைப்பது நிச்சயம்:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி குறித்து விரிவாகவும் பொறுமையாகவும் பேசினார். திரண்டுள்ள மகளிர் அணியைப் பார்க்கும்போது அது மிகவும் பவர்ஃபுல்லாக இருப்பதாகவும், அதிகளவில் இளம் பெண்கள் கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருப்பதாகவும் கூறினார். இந்தக் கூட்டம் பவர்ஃபுல்லாக மட்டுமல்லாமல், உமன் பவரால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதாக எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள் என்றும், பெண்களை அடிமைப்படுத்தியிருந்த நிலையை உடைத்தது திராவிட இயக்கம்தான் என்றும் அவர் கூறினார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க: புத்தகம் இருக்கும் கைகளில் பட்டாக்கத்திகள்.. இதற்கு யார் பொறுப்பு – எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..

1.30 கோடி பேருக்கு வழங்கப்படும் உரிமை தொகை:

உரிமைத் தொகைத் திட்டம் பல பெண்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாகவும், சுமார் 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுவரை 28 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டிலேயே பெண்கள் மேயர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், தேவையில்லாத நிபந்தனைகளுடன் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியதாகவும் விமர்சித்தார்.

விடியல் பயணத்தால் பயணடைந்த பெண்கள்:


முதல்வராக பொறுப்பேற்றதும் தனது முதல் கையெழுத்து ‘விடியல் பயணம்’ திட்டத்துக்காகத்தான் இருந்ததாகவும், புதிய வாய்ப்புகளைத் தேடி பெண்கள் ஏராளமானோர் இந்த விடியல் பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். பெண்களின் சுமையை குறைக்கும் திட்டமாக காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெண் கல்விக்கு திமுக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என்றும் அவர் கூறினார்.

மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும், சங்கிகளை வெட்கப்படுத்தும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு முட்டுக் கொடுத்து பேசுகிறார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார் என தெரிவித்தார்.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு