ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில உணவகங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில உணவகங்களில் இதுகுறித்து வெளியில் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கோப்பு புகைப்படம்

Published: 

10 Mar 2026 15:02 PM

 IST

சென்னை, மார்ச் 10, 2026: எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதே சமயத்தில் தமிழகத்தில் கையிருப்பில் இருக்கக்கூடிய எரிவாயு எவ்வளவு உள்ளது என்பது தொடர்பாகவும் அவர் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?

ஹார்மோஸ் நீரிணையை மூடிய ஈரான்:

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இது மூடப்பட்டுள்ள நிலையில் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இடைநிலை நீடிக்கும் பட்சத்தில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 150 அமெரிக்க டாலர்களை கடந்து விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் 13 ஆயிரத்து 841 ரூபாயாகும்.

மேலும் படிக்க: ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!

இந்த சூழலில் எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹60 மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ₹150 உயர்த்தப்பட்டது.

ஏரிவாயு தட்டுப்பாடு:

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில உணவகங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில உணவகங்களில் உணவு தயாரிக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில உணவகங்களில் இதுகுறித்து வெளியில் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை:

இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: “அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும், அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்” என தெரிவித்தார்.

Follow Us
Related Stories
கொலை, கொள்ளை, போதை… தமிழகத்தின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறி
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..