ஜனநாயகன்…பராசக்திக்கு சிக்கல்… சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் சென்சார் போர்டு – முதல்வர் கண்டனம்

M. K. Stalin Condemns Censor Board: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் தணிக்கைத்துறையின் சிக்கலை சந்தித்தது. இந்த நிலையில் தணிக்கைத்துறையின் இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜனநாயகன்...பராசக்திக்கு சிக்கல்... சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் சென்சார் போர்டு - முதல்வர் கண்டனம்

விஜய் - மு.க.ஸ்டாலின் - சிவகார்த்திகேயன்

Updated On: 

09 Jan 2026 21:39 PM

 IST

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படத்துக்கு ஜனவரி 9, 2026 அன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிடி ஆஷா,  யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கைத்துறைக்கு உத்தரவிட்டார்.  இந்த நிலையில் தணிக்கைத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் நீதிபதி ஆஷா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் வழக்கு விசாரணையை ஜனவரி 21, 2026 அன்று ஒத்திவைத்தனர். இதனையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தணிக்கைத்துறையின் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு தணிக்கைத்துறை 25 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கி யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் அறிஞர் அண்ணா பேசும் வசனம், ஹிந்தி தொடர்பான வசனங்களை நீக்க உத்தரவிட்டது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தணிக்கைத்துறையின் இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடும் கண்டனங்கள் என குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு வெளியாகவிருந்த இரண்டு படங்களும் தணிக்கைத்துறையின் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள நிலையில் முதல்வரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

முதல்வரின் எக்ஸ் பதிவு

 

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து பராசக்தி திரைப்படமும் தணிக்கையின் போது சிக்கலைத் தந்தித்தது. தணிக்கைத் துறை இந்தப் படத்துக்கு காட்சிகள் மற்றும் வசனங்கள் என 25 இடங்களை நீக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அறிஞர் அண்ணா பேசும் வசனம், ஹிந்தி என்ற வார்த்தை உள்ளிட்டவற்றை நீக்க அறிவுறுத்தியதுடன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு தயாரிப்பு நிறுவனம் சம்மதித்த காரணத்தால் பராசக்தி திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிக்க : ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை

இந்த பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாத காரணத்தால் பராசக்தி திரைப்படம் தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த தமிழ்நாட்டில் 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு இணையான இந்தியாவின் குளிர்பிரதேசம்... டிராஸ் பற்றி தெரியுமா?
இந்த ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவிருக்கும் போட்டிகள் - முழு விவரம் இதோ
மும்பையில் தீவிரவாத தாக்குதல்? வெளியான அதிர்ச்சி தகவல்
வட இந்தியாவில் கடும் குளிர்... தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை - முழுமையான வானிலை நிலவரம் இதோ