Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Chennai Hospital Error: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு தவறுதலாக சுன்னத் சிகிச்சை செய்யப்பட்டது. மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயவர்தன் என்ற சிறுவனுக்கு, வாய்ப்புண் அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஞாபக மறதி மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், மருத்துவர் தவறு செய்து சுன்னத் செய்துள்ளார்.

வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
வாய்ப்புண்ணுக்காக வந்த சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 26 May 2025 11:46 AM

சென்னை மே 26: சென்னை ஐஸ் ஹவுஸ் (Chennai Ice House) பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் (Private hospital) வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு தவறுதலாக சுன்னத் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயவர்தனுக்கு வாயில் கட்டி ஏற்பட்டிருந்ததால், அதனை அகற்றவே அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், ஞாபக மறதி மருந்து அளிக்கப்பட்டபோது வாயில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக சுன்னத் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு தவறுதலாக சுன்னத்

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள கிரசண்ட் என்ற தனியார் மருத்துவமனையில் வாய்ப்புண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனுக்கு, தவறுதலாக சுன்னத் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு ஜெயவர்தன் என்ற 9 வயது மகன் உள்ளார். ஜெயவர்தனுக்கு வாயில் கட்டி ஏற்பட்டதால், அதை அகற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவன் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

சிகிச்சையின் போது, குழந்தை ஞாபக மறதி மருந்தில் இருந்தபோது, வாயில் சிசிச்சை அளிப்பதற்கு பதிலாக Dr. முகம்மது ஓவைசி எனப்படும் மருத்துவர், சுன்னத் சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவரின் செயல் தாமாக ஏற்பட்ட தவறா, கணிசமான பிழையா என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுவனின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

சுன்னத் சிகிச்சை

சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை என்பது, இஸ்லாமிய மரபில் சிறுவன் பிறந்த பிறகு மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான ஆன்மீக மற்றும் மருத்துவ சிகிச்சையாகும். சுன்னத் சிகிச்சை (Circumcision) என்பது ஆண் குழந்தையின் பெனிஸ் (மூளைப்பை) என்ற பகுதியில் இருக்கும் தோலை அகற்றுவது ஆகும்.

இஸ்லாமிய பரம்பரையில் புனிதமாகக் கருதப்படுகிறது. நபி முகம்மது (சல்) அவர்களின் உபதேசப்படி இது முக்கியம்.

ஆரோக்கிய நன்மைகள்: பருகும் பிரச்சினைகள், தொற்றுகள் மற்றும் சுகாதார சிக்கல்களை குறைக்க உதவும்.

சுத்தம் மற்றும் சுகாதாரம்: வியாதி பாய்ச்சலை தடுக்கும்.

சமூக மற்றும் ஆன்மீக காரணங்கள்: சமுதாயத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கை வலுப்படுத்தும்.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?...
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!...
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்...
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்...
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்...
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!...
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?...
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!...
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ...
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்...
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!...