நெல் மூட்டை விவகாரத்தில் இபிஎஸ் கூறியது புளூகு மூட்டை: முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

CM Stalin responds to EPS accusation: நெல் மூட்டைகள் கொள்முதல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதோடு, களத்தில் விவசாயிகள் கைகளை பிடித்திருக்க வேண்டிய அவர், பைசன் படம் பார்க்க நேரம் செலவழித்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நெல் மூட்டை விவகாரத்தில் இபிஎஸ் கூறியது புளூகு மூட்டை: முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

இபிஎஸ் மற்றும் முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

26 Oct 2025 19:50 PM

 IST

சென்னை, அக்டோபர் 26: பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என இபிஎஸ் செயல்படுகிறார் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அத்துடன், நெல்மூட்டை கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னது எல்லாம் புளூகு மூட்டை, பொய்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளி மக்களுக்காக பணியாற்றுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன. அரசு எப்போது தவறு செய்யும் என்று காத்திருக்கும் இபிஎஸ், அதனை உடனடியாக சுட்டிக்காட்டி ஸ்கோர் செய்கிறார். அரசு தரப்பிலும், அவர்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படுகிறது.

அந்தவகையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளபக்கத்தில், “நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

Also read: ‘எதிரியா இருக்க தகுதி வேணும்’ அஜித் வசனத்தைச் சொல்லி விஜய்யை விமர்சித்த சீமான்!

இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி:

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், புயல் சின்னமும், பெருமழையும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை அச்சுறுத்துகிற நிலையில், வடகிழக்குப் பருவகால இயற்கையின் தன்மையை உணர்ந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர் சூழல்களில் எதிர்க்கட்சியினரும் களமிறங்கி மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதுதான் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளம்.

2018ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான திமுகதான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார்.

Also read: விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது: ராஜேந்திர பாலாஜி

இபிஎஸ் சொன்னதெல்லாம் புளுகு மூட்டை:

மேலும், நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை திராவிட மாடல் அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும், அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம். அத்துடன், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.