அதிக பெண் நீதிபதிகள்.. தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்..

Chief Justice K.R. Sriram: ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் -க்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அதிக பெண் நீதிபதிகள்.. தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்..

தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்

Published: 

19 Jul 2025 07:20 AM

சென்னை, ஜூலை 19, 2025: ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித்துறையிலும் ஏராளமான பெண்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மாநிலத்திற்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா எனும் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் -க்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

தலைமை நீதிபதியாக நிறைய கற்றுக்கொண்டேன் – நீதிபது ஸ்ரீராம்:

இந்த நிகழ்ச்சியில் பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து இதுவரை ஐந்து நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர் என குறிப்பிட்டார். பின்னர் ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி ஸ்ரீராம், புகழ்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது மாத பதவிக்காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டுள்ளதாகவும், முழு திருப்தியுடன் விடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய 443வது திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

அதிக பெண் நீதிபதிகள் பதிவு – தமிழ்நாட்டை பாராட்டிய நீதிபதி:

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழக நீதித்துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில், 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு மாநிலத்தை பாராட்டுவதாகவும் கூறி, கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளையும் குறிப்பிட்டு பேசினார்.

புதிய தலைமை நீதிபதி:

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.

மேலும் படிக்க: திமுகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

அதனை தொடர்ந்து அவர், பொறுப்பு தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பதிவி ஏற்க உள்ளார்.