சென்னையில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

Tamil Nadu Weather Alert: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பதிவானது. வரும் நாட்களில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை நீடிக்கும் என தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?

கோப்பு புகைப்படம்

Published: 

19 Jul 2025 06:05 AM

வானிலை நிலவரம், ஜூலை 19, 2025: சென்னையில் இரவு முழுவதும் நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவானது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், கடந்த சில தினங்களாக சென்னையில் மாலை முதல் இரவு நேரங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவான நிலையில், கடந்த சில நாட்களாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 19 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

அதேசமயம் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 20, 2025 தேதியான நாளை மீண்டும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!

சென்னையில் தொடரும் மழை:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 18 2025 தேதியான நேற்று இரவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பதிவானது. வரும் நாட்களில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை நீடிக்கும் என தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘சுட்டுக் கொல்லனும்’ திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த கொடூரம்… தாய் கண்ணீர்மல்க பேட்டி!

இரவு முழுவதும் தொடர்ந்த மழை:


சென்னையின் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், சின்னமலை, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, அபிராமபுரம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பதிவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்