Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் விடிய விடிய பெய்த மழை.. இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Rain Alert: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 17, 2025 தேதியான நேற்று பிற்பகல் முதல் நகரின் பல பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதேபோல், சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை இடைவிடாது மிதமான மழை பதிவானது.

சென்னையில் விடிய விடிய பெய்த மழை.. இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Nov 2025 06:15 AM IST

வானிலை நிலவரம் — நவம்பர் 18, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் சற்று வறண்ட வானிலை நிலவிய நிலையில், தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்த சூழலில், இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

அதேபோல் வரும் நவம்பர் 22, 2025 அன்று தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் நல்ல கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: சபரிமலைக்கு தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் தொடரும் கனமழை:

அந்த வகையில், நவம்பர் 18, 2025 (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 19 மற்றும் 20, 2025 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிகனமழை இருக்காது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை மட்டும் தான் இருக்கும் – பிரதீப் ஜான்..

நவம்பர் 22, 2025 அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் நவம்பர் 23, 2025 அன்று மேலே குறிப்பிடப்பட்ட மாவட்டங்களுடன் சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விடிய விடிய மழை:

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 17, 2025 தேதியான நேற்று பிற்பகல் முதல் நகரின் பல பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதேபோல், சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை இடைவிடாது மிதமான மழை பதிவானது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை அடுத்த சில நாட்களும் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரையில் மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, மீனம்பாக்கம், முடிச்சூர், தாம்பரம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, மவுண்ட் ரோடு, காமராஜர் சாலை, பட்டினப்பாக்கம், மந்தவழி, மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர் என அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய மிதமான மழை பதிவாகியுள்ளது.