உஷார்.. தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்!

Chennai Man Dies In Thailand : சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது உயிரிழந்துள்ளார். ஆழ்கடலில் உயிரினங்களை பார்க்க செல்லும்போது, ஆக்சிஜன் முறையாக கிடைக்காததால், மூச்சுத் திணறி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உஷார்.. தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்!

உயிரிழந்த நபர்

Updated On: 

23 Sep 2025 07:12 AM

 IST

சென்னை, செப்டம்பர் 23 : தாய்லாந்தில் சுற்றுலா சென்ற, சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 43 வயதான திவாகர் எனவும் இவர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தாய்லாந்து சுற்றுலா தளங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை பெரும் பங்கு வகிக்கிறது. அந்த அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து தாய்லாந்துக்கு லட்சக்கணக்கானோர் சுற்றுலா சென்று வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்கின்றனர். தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இதனால், தாய்லாந்துக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வருகிறது. இந்த நிலையில் தான், சென்னையில் இருந்து சு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் மண்டையம்மன் கோயில் மெயின் தெருவைச் சேர்ந்தவர் திவாகர் (43). இவர் சேதுப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளார். திவாகர் பணியாற்றும் நிறுவனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 60க்கும் மேற்பட்டோரை அந்நிறுவனம் தாய்லாந்துக்கு அழைத்து சென்றுள்ளது. அதில், திவாகரும் சென்றிருக்கிறார். இதற்காக 2025 செப்டம்பர் 15ஆம் தேதி இரவு திவாகர் தன்னுடைய நிறுவன ஊழியர்களுடன் தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.

Also Read : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்.. காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 5 பேர் கைது!

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவருக்கு நேர்ந்த சோகம்

அப்போது, அவர் அங்கு ஆழ்கடலில் உள்ள வண் மீன்கள், கடற்பாறைகளை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, அவருக்கு அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆழ்க்கடலுக்கு செல்லும்போது, திவாகருக்கு ஆக்சிஜன் முறையாக கிடைக்காததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழுந்துள்ளார். இதனை அடுத்து, அங்குள்ள ஊழியர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து திவாகரனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட திவாகரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திவாகரின் உடலை கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதி அளித்தது.

Also Read : காதல் விவகாரம்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை.. திருச்செந்தூரில் அதிர்ச்சி

இதற்கிடையில், திவாகரின் உறவினர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு அவரது உடலை தாமதமின்றி தாயகம் கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், திவாகருக்கு ஒருசில ஆண்டுகளாக மூச்சுத்திணறல் கோளாறு இருந்துள்ளதாகவும், இது திவாகருக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளனர்.  சுற்றுலா சென்றவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.