சென்னை கோயம்பேடு சாலையில் விரிசல் – வாகன ஓட்டிகள் அச்சம்

Chennai Road Collapse:கோயம்பேடு அருகே பூந்தமல்லி சாலையில் ஏற்பட்ட பெரிய விரிசல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவில் கனரக வாகனம் சென்றதால் விரிசல் பெரிதாகி விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டையார்பேட்டை சாலை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்கள் நகரின் சாலைப் பராமரிப்பின் மோசமான நிலையைக் காட்டுகிறது.

சென்னை கோயம்பேடு சாலையில் விரிசல் – வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை கோயம்பேடு சாலையில் விரிசல்

Updated On: 

03 Jun 2025 06:59 AM

 IST

சென்னை ஜூன் 03: சென்னை கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கத்தில் சாலையில் பெரிய விரிசல் ஏற்பட்டது. பல நாட்களாக இருந்த இந்த விரிசல், கனரக வாகனம் சென்றபோது பெரிதாக விரிவடைந்தது. இது இரவில் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அருகிலிருந்த போலீசார் உடனடியாக தடுப்புகள் அமைத்தனர். பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். இதேபோல் தண்டையார்பேட்டையில் சாலை இடிந்து விழுந்த சம்பவமும் சமீபத்தில் நடந்தது. இந்த சம்பவம், நகர சாலைகளின் பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கோயம்பேடு சாலையில் விரிசல்

சென்னையின் கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவிலிருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வழியில், அரும்பாக்கம் பகுதியின் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் பல நாட்களாக இருந்த நிலையில், நேற்று இரவு ஒரு கனரக வாகனம் அந்த வழியாகச் சென்றபோது, விரிசல் மேலும் விரிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய திடீர் பள்ளம்

சாலையின் நடுவே ஏற்பட்ட இந்த விபத்துஅபாயம், அருகிலிருந்த போலீசார் சாலையைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு, தடுப்புகளை அமைத்தனர். சம்பவம் இரவுப் போது நடந்ததனால் பெரும் உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது பெரும் நிம்மதியாக இருந்தாலும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதனால் கடும் பயத்தில் உள்ளனர்.

இதேபோல் மற்றொரு சம்பவம்

இதேபோல் கடந்த வாரம் சென்னை தண்டையார்பேட்டை பகுதியில், மழை காரணமாக நிலத்தடி கழிவுடன் சாலை இடிந்து விழுந்தது. அந்தச் சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் நிலையில், அந்த இடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவங்கள், நகர சாலைகளின் பராமரிப்பு குறைவையும், அதனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அபாயத்தையும் வெளிப்படுத்துகிறது. உடனடியாக சாலை பழுது பார்க்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

10 அடி ஆழமுள்ள பெரிய பள்ளம்

 சென்னையில் சாலையில் ஏற்பட்ட பள்ளம்

சென்னை தரமணி-திருவான்மியூர் யூ-டர்ன் பாலம் அருகே கடந்த 2025 மே 17ஆம் தேதி, சாலையின் நடுவே திடீரென 10 அடி ஆழமுள்ள பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற வாடகை கார், அந்தப் பள்ளத்தில் தலைகுப்புறமாக கவிழ்ந்து விழுந்தது.

காரில், சோழிங்கநல்லூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் விக்னேஷ் (வயது 45), அவரது மனைவி தன்யா (40) மற்றும் குழந்தைகள் அக்ஷயா (12), அத்வைத் (9) ஆகியோருடன் பயணித்தனர். அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாகனம் பள்ளத்தில் விழுந்தபோதும், அதில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம், நகர சாலைகளின் பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பு மறுசீரமைப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்