கோயம்பேடு – பட்டாபிராம் இடையே மெட்ரோ.. தமிழ்நாடு அரசு அனுமதி!
Koyambedu - Pattabiram Line Approved by Tamil Nadu Government | சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட திட்டத்தின் விரிவாக்கமாக கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோவை நீட்டிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இசென்னை, மே 2 : சென்னையில் கோயம்பேடு – பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் (Metro Train) திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு இன்று (மே 2, 2025) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் மேலும் ஒரு மெட்ரோ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையேயான இந்த மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் பூந்தமல்லி – பரந்தூர் இடையே மெட்ரோ திட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கும் என மொத்தமாக மூன்று வழித்தடங்களில் இந்த மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று வழித்தடங்களில் பூந்தமல்லி வழித்தடத்தில் பணிகள் இறுதி கட்டத்தைஅ எட்டியுள்ள நிலையில், 2025 டிசம்பர் மாதத்திற்கு இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு
News…🚨
TN Govt has accorded in-principle approval for providing metro connectivity from Koyambedu to Pattabiram (Outer Ring Road) for a length of 21.76 kms and has recommended it to Government of India for its approval… #Chennai #Metro Ⓜ️🚊 pic.twitter.com/KSBD8NuTIk— Chennai Updates (@UpdatesChennai) May 2, 2025
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு – பட்டாபிராம் வரை ரூ.9,928 கோடி மதிப்பில் 21.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 19 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், மூன்று மேம்பால சாலை ஒருங்கிணைப்புகளுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் ஏற்கனவே இரண்டு மெட்ரோ வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கோயம்பேடு மற்றும் ஆவடி வரையிலான வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்க பட்ட நிலையில், தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.