அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மே 28ல் தீர்ப்பு அளிக்கும் சென்னை கோர்ட்!

anna university harassment case : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் 2025 மே 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 2025 பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2025 மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மே 28ல் தீர்ப்பு அளிக்கும் சென்னை கோர்ட்!

கைதான ஞானசேகரன்

Updated On: 

25 May 2025 12:18 PM

சென்னை, மே 25 : சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி (anna university harassment case) பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் 2025 மே 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 2025 பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2025 மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,  இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை  கடுமையாக  விமர்சித்திருந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024 டிசம்பர் மாதம் 19 வயதான மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

பல்கலைக்கழக வளாகத்தில் இரவில் 8 மணியளவில் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது,  மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், மேலும், தன்னுடன் இருந்த நண்பரை மோசமாக அடித்து இருப்பதாகவும்  பாதிக்கப்பட்ட மாணவி  புகார் மனுவில் உள்ளது.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டுடூர்புரம் காவல்நிலையத்தில் அடுத்த நாள் காலையிலேயே புகார் அளித்தார். இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கில் 2024 டிசம்பர் மாதம் 37 வயதான கோடூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் பிரியாணி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

ஞானசேகரின் மீது 331(6) (இரவில் அத்துமீறி நுழைதல்), 126(2) (எந்தவொரு நபரையும் தவறாகத் தடுத்து நிறுத்துதல்), 140(4) (கடுமையான காயத்திற்கு ஆளாக்குவதற்காக ஒருவரைக் கடத்துதல், 75(2) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 64(1) (பாலியல் வன்கொடுமை) ஆகிய பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ப்பட்டது.

மே 28ல் தீர்ப்பு அளிக்கும் சென்னை கோர்ட்

இந்த வழக்கும் சென்னை  மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  ஞானசேகரனுக்கு எதிரான சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனு தாக்க செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கு முகாந்திரம் இருப்பதால், வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது என காவல்துறை கூறியது.

இதனை ஏற்ற நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மகளிர் நீதிமன்றம் 2025 மே 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கிறது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், 5 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படுகிறது குறிப்படத்தக்கது.