மண்டையை பொளக்கும் வெயில்.. 41 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை..

Tamil Nadu Weather Update: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 40 டிகிரி செல்சியசும், நாகையில் 39.4 டிகிரி செல்சியசும்வெப்பநிலை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மண்டையை பொளக்கும் வெயில்.. 41 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை..

கோப்பு புகைப்படம்

Published: 

12 Jul 2025 13:52 PM

வானிலை நிலவரம், ஜூலை 12, 2025: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, அரியலூர், திருவள்ளூர், சிவகங்கை, திருவண்ணாமலை, ராணிபேட்டை, மயிலாடுதுறை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. ஆனால் தமிழகத்தின் அநேக பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 12 2025 தேதியான இன்று ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை வரும் ஜூலை 18 2025 வரி நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்ப நிலை என்பது ஒரு சில பகுதிகளில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்த காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் பதிவான 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 40 டிகிரி செல்சியசும், நாகையில் 39.4 டிகிரி செல்சியசும், தூத்துக்குடியில் 38.5° செல்சியசும், திருச்சியில் 38.7 டிகிரி செல்சியசும், தஞ்சாவூர் 38 டிகிரி செல்சியசும், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையில் லேசான மழை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஜூலை 11.2025 தேதியான நேற்று சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.3 டிகிரி செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.

Also Read: திருப்பூர் அரசு பள்ளியில் அவலம்: 8 ஆண்டுகளாக மொட்டை மாடியில் வகுப்புகள்..!

இந்நிலையில் சென்னையில் கடுமையான வெயிலின் காரணமாக மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக நகரின் அனேக பகுதிகளில் லேசான மழை பதிவானது. இதனால் உஷ்ணம் சற்று தணிந்து காணப்பட்டாலும் மீண்டும் காலை நேரங்களில் வெப்பநிலை என்பது அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.