மழைக்கு ரெடியா மக்களே? சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு?
Tamil Nadu Weather Alert: வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பதிவாகக்கூடும் என்றும், நவம்பர் மாதம் இறுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
வானிலை நிலவரம், நவம்பர் 17, 2025: நவம்பர் 15, 2025 அன்று இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (16-11-2025) காலை அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு – வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று, (17-11-2025) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
நாளை அதாவது நவம்பர் 18, 2025 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் நவம்பர் 19, 2025 அன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..
அதேபோல், வரும் நவம்பர் 20, 2025 அன்று கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 2025 நவம்பர் 21, 22, ஆகிய தேதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல்:
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பதிவாகக்கூடும் என்றும், நவம்பர் மாதம் இறுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவில் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 300க்கும் மேற்பட்ட வாக்காளர் படிவங்கள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.