Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது, அந்த வகையில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Aug 2025 14:35 PM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 8, 2025: தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து கடலோர தமிழக வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 8, 2025, தேதியான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 2025 தேதியான நாளை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காட்டில் பதிவான 9 செ.மீ மழை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழைப்பதிவு இருந்து வருகிறது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் ஆற்காடு (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 9, ஆம்பூர் (திருப்பத்தூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்) தலா 8, செய்யார் ARG (திருவண்ணாமலை) 7, காட்பாடி (வேலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: ‘வெறும் விளம்பரம் தான்’ மாநில கல்விக் கொள்கையை விமர்சித்த அண்ணாமலை

அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதேபோல் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 10 2025 அன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது ஆகஸ்ட் 14 2025 வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ராமதாஸ், அன்புமணிக்கு அழைப்பு விடுத்த நீதிபதி.. கட்சியின் நலன் கருதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..

அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும் மதுரை திருச்சி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.