மழைக்கு ரெடியா இருங்க மக்களே.. 13 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
Tamil Nadu Weather Alert: அக்டோபர் 7, 2025 அன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், அக்டோபர் 7, 2025: தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகக் கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்னிந்திய பகுதிகளின் மேல் இன்னொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் காணப்படுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 7, 2025 அன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை :
அக்டோபர் 8, 2025 அன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9, 2025 அன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘ அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ‘ – வீடியோ காலில் பேசிய விஜய்..
அதேபோல், அக்டோபர் 10, 2025 அன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 11, 2025 அன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அக்டோபர் 12, 2025 அன்று இதே மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் வெப்பநிலை – சென்னையில் எப்படி?
மழை ஒரு பக்கம் பெய்தாலும், பிற மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் பகல் நேரங்களில் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் விவகாரம்…. நீதிபதியின் கருத்துக்கு விமர்சனம் – முன்னாள் காவல் அதிகாரி கைது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெப்பச் சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ச்சியான மழையின் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.