விழுப்புரத்தில் பதிவான 19 செ.மீ மழை.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: செப்டம்பர் 19, 2025, தேதியான இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 25, 2025 வரை மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், செப்டம்பர் 19, 2025: தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் செப்டம்பர் 18, 2025, தேதியான நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பதிவானது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, விழுப்புரம் (விழுப்புரம்) 19, திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 17, திருப்பத்தூர் (திருப்பத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கெடார் (விழுப்புரம்) தலா 16, வாணியம்பாடி (திருப்பத்தூர்) 15, தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 14, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வனமாதேவி (கடலூர்), பண்ருட்டி (கடலூர்) தலா 13,
வளவனூர் (விழுப்புரம்) 12, மணம்பூண்டி (விழுப்புரம்), சூரப்பட்டு (விழுப்புரம்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), முகையூர் (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), கோலியனூர் (விழுப்புரம்) தலா 11, மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), பத்துக்கண்ணு (புதுசேரி), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 10 செ.மீ மழை பதிவகியுள்ளது.
மேலும் படிக்க: விஜய் பிரச்சாரத்திற்காக சிறப்பு குழு.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தலைமை கழகம்..
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக செப்டம்பர் 19, 2025, தேதியான இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெல்லையில் பரபரப்பு.. இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்ஐ.. திக்திக் வீடியோ!
அதேபோல் செப்டம்பர் 20, 2025 மற்றும் செப்டம்பர் 21, 2025 ஆகிய இரண்டு நாட்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் 25 செப்டம்பர் 2025 வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக அதிகபட்ச வெப்பநிலையின் கணிசமாக குறைந்துள்ளது இதனால் 32 டிகிரி செல்சியஸை ஒட்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.