இனி தி.நகருக்கு ஈஸியா போகலாம்.. சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம்.. விரைவில் திறப்பு!
Chennai T Nagar First Steel Flyover : சென்னையின் முதல் இரும்பு பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைய உள்ள நிலையில், 2025 செப்டம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.நகர் இரும்பு பாலம்
சென்னை, செப்டம்பர் 18 : சென்னை தியாகராய நகரில் ரூ.131 கோடியில் கட்டப்பட்டு வரும் முதல் இரும்பு மேம்பாலம் (Chennai First Steel Flyover) 2025 செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தி.நகருக்கு இனி போக்குவரத்து நெரிசலின்றி ஈஸியாக செல்ல முடியும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு இடங்களில் போக்குவரத்தை எளிதாக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக்கிய இடமான தியாகராய நகரில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தி.நகர் என்பது சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றாகவும், நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து எளிதாக்க மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 2023ஆம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முடியும் தருவாயில் தற்போது உள்ளது. பொதுவாகவே சென்னையில் கான்கிரீட் பாலங்கள் கட்டப்படுகிறது. ஆனால், தி.நகர் மேம்பாலம் முழுக்க முழுக்க இரும்பு தூண்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் ரூ.131 கோடி செலவில் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை சிஐடி நகர் முதல் பிரதான் சாலையில் துவங்கும் இந்த இரும்பு பாலம், தி.நகர் பேருந்து நிலையம் வரை பனகல் பூங்கா மேம்பாலத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
Also Read : மிரண்ட சென்னை ஏர்போர்ட்… ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.. சிக்கிய கென்யா இளைஞர்!
சென்னையின் முதல் இரும்பு மேம்பாலம் விரைவில் திறப்பு
வடக்கு உஸ்மான சாலை மேம்பாலத்துடன் இந்த இரும்பு பாலம் இணைவதன் மூலம் சிஐடி நகரில் இருந்து பனகல் பூங்கா வரை 2 கி.மீ நீளத்தை மேம்பால பாதை அமைய உள்ளது. இதன் மூலம், சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் சாலையை அடைய வெறும் 2 முதல் 3 நிமிடங்களே ஆகும். மேலும், மவுண்ட் ரோட்டில் இருந்து தி.நகருக்கும் 5 நிமிடமே ஆகும்.
தற்போது இந்த சாலைகளை கடக்க 30 நிமிடம் வரை ஆகிறது. இந்த பாலம் 50 ஆண்டுகால ஆயுளைக் கொண்டுள்ளது. இந்த தற்போது இந்த பாலத்தின் 96 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது, இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலம் 2025 செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : இன்று பிச்சு உதறபோகும் கனமழை.. 20 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தி.நகர் இரும்பு பாலத்தின் பணிக்ள 96 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 10 நாட்களில் முடிக்கப்படும். சாலை அமைத்தல் மற்றும் மீடியனுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. பழைய மற்றும் புதிய பாலங்களில் விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது, மேலும் அறிவிப்பு பலகை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைப்பார்” என்றார்.