சென்னையில் ரூ.2.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பெண் குழந்தை.. 6 பேர் அதிரடி கைது!
Infant Sold For 2.2 Lakhs in Chennai | சென்னை, கண்ணகி நகரை சேர்ந்த தம்பதி தனது பச்சிளம் பெண் குழந்தையை ரூ.2.2 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
சென்னை, நவம்பர் 06 : சென்னை (Chennai) துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜி. பெயிண்டரான இவருக்கு திருமணமாகி வினிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு 2025, மே மாதம் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்த தம்பதி, தங்களின் மூன்று மாத குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
குழந்தையை விற்பனை செய்ய தோழியிடம் உதவி கேட்ட பெண்
இந்த நிலையில் அந்த குழந்தையின் தாய் தனது மாமியார் ஆகியோர் இணைந்து குழந்தையை விற்பனை செய்வதற்காக தோழியிடம் உதவி கேட்டுள்ளனர். அந்த பெண் தனது மாமியாரான தூய்மை பணியாளர் சகாய மேரியிடம் கூறியுள்ளார். அவர் இந்த விவகாரத்தை தனது தோழியான சுமதி என்பவரிடம் கூறியுள்ளார். அதன்படி, திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த தம்பதிக்கு அந்த குழந்தையை விற்பனை செய்ய சுமதி ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இதையும் படிங்க : வேகமாக சென்ற கார் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி.. விபத்து குறித்து வெளியான திடுக் தகவல்!
ரூ.2.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை
இந்த குழந்தையை விற்பனை செய்வதற்காக தம்பதிக்கு ரூ.2.2 லட்சம் பணம் தரப்பட்டது. அதில் வினிஷாவின் தோழி சிவரஞ்சனிக்கு ரூ.15,000, சகாய மேரிக்கு ரூ.5,000 மற்றும் சுமதிக்கு ரூ.50,000 என அந்த தம்பதி பணம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து ஜூலை மாதம் குழந்தை திருவண்ணாமலை தம்பதியிடம் ஒப்பகடைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர்கள் வாரம் ஒருமுறை தாய் பால் கொடுக்க குழந்தையை கண்ணகி நகருக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது குறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : மணலி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு.. மூச்சு திணறல், குமட்டல், கண் எரிச்சலால் பொது மக்கள் அவதி
இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், குழந்தையின் பெற்றோர், அதனை வாங்கியவர்கள், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட 6 மாத பெண் குழந்தை தற்போது காப்பாகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.