தென் மாவட்ட பயணிகளே.. ஜிஎஸ்டி சாலையில் போகாதீங்க.. ரூட் மாற்றம்!
Chennai Trichy Highway : 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருக்கும் நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். இதனால், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால், மாற்று வழிகளை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, ஆகஸ்ட் 14 : சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு பதில், மாற்று வழியில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது, 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்று கிழமை என தொடர்ந்து விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று முதலே சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்குவார்கள்.
குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கோனார் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், சென்னை ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடும். ஒரே நேரத்தில் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்புபவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும். இதில், செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும், சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில், செங்கல்பட்டு காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read : தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்கள்.. என்னென்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு
Chengalpattu District Police
Traffic Alert!
Ongoing flyover construction and road expansion on NH-32 (GST Road) at Pukkathurai Jn and Padalam Jn in Chengalpattu district may cause traffic congestion, especially during this Holiday / Festive season. (1/2)#tnpolice #traffic
— Chengalpattu District Police (@SP_chengalpattu) August 14, 2025
அதாவது, சாலைப்பணிகள் நடந்து வருவதால், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் NH-32 (GST எனவே, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ECR, GWT போன்ற மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பாக பயணம் செய்வீர்” என தெரிவித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஈஸியாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : பயணிகளே அலர்ட்… சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!