விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. திடீரென மாற்றப்பட்ட நீதிபதி.. பின்னணியில் என்ன நடந்தது?
Chengalpattu Family Welfare Judge : தவெக தலைவர் விஜய் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவகாரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதி சசிகலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணமும் வெளியாகி உள்ளது.

விஜய்-சங்கீதா வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றம்
செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த மார்ச் மாதம் தான் குடும்ப நல நீதிபதியாக பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக சுஜாதா என்பவர் நீதிபதியாக இருந்து வந்தார். இந்த நீதிமன்றத்தில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி ( திங்கள்கிழமை) விஜய், சங்கீதா விவகாரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இருவரும் ஆஜராகாத காரணத்தால் ஜூன் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், விஜய், சங்கீதா வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா திடீரென விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி பணியிட மாற்றத்துக்கு காரணம்
அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிபதியாக சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று புதன்கிழமை இரவு ( ஏப்ரல் 29) பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் இந்த திடீர் பணியிட மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நேரில் ஆஜராக இருந்தனர். ஆனால், அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகுவதற்கு மனு அளித்திருந்தனர்.
மேலும் படிக்க: தர்மபுரி காட்டில் பெண் சடலமாக மீட்பு: கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய பயங்கரம்.. இருவர் அதிரடி கைது!
இரவோடு இரவாக நீதிபதி பணியிட மாற்றம்
இந்த மனுவை நீதிபதி சசிகலா உடனே ஏற்றதுடன், விஜய் மற்றும் சங்கீதாவை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு உடனே அனுமதி அளித்திருந்தார். இதன் காரணமாகவே செங்கல்பட்டு குடும்ப நிலை நீதிபதி சசிகலா இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக தலைவர் விஜய் வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டிய அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான முதல் விசாரணை கடந்த ஏப்ரல் 20- ஆம் தேதி நடைபெற்றது.
ஜூன் 15- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு விசாரணை
ஆனால், இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இவர்களுக்கு பதிலாக அவர்களது நீதிபதிகள் ஆஜராகி அதற்கான காரணத்தை தெரிவித்தனர். மேலும், விஜய், சங்கீதா நேரில் ஆஜராவதற்கு ஜூன் 15- ஆம் தேதியை குறிப்பிட்டனர். அதனை நீதிபதி சசிகலா ஏற்றதுடன் அன்றைய தினத்துக்கு விவகாரத்து வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இதில், விஜய் மற்றும் சங்கீதாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற காரணத்தால் நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. “விசில் புரட்சி வெடிக்கப்போகுது”.. செங்கோட்டையன் அதிரடி