மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் – நிராகரித்ததற்கான 5 காரணங்கள் இதுதான்- மத்திய அரசு விளக்கம்

Govt Explains Metro Decision : நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கிறதா என திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். அதற்கு 5 காரணங்கள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் - நிராகரித்ததற்கான 5 காரணங்கள் இதுதான்- மத்திய அரசு விளக்கம்

மாதிரி புகைப்படம்

Published: 

09 Dec 2025 16:32 PM

 IST

புதுடெல்லி, டிசம்பர் 9: கோயம்புத்தூர், மற்றும் மதுரை (Madurai)ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில்  (Metro Rail)திட்ட அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் திருப்பி அனுப்பியது. இதனையடுத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை எதிர்த்து கேள்வி எழுப்பின. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான 5 காரணஙகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை இணை அமைச்சர் டோகன் சாஹூ தெரிவித்திருக்கிறார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கை இடையே சுமார் 31 கி.மீ தூரத்திற்கும், கோவையில் அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரையும், உக்கடம் தொடங்கி வலியாம்பாளையம் பிரிவு வரை 39 கி.மீ தூரத்திற்கும் மெட்ரோ ரயில் கொண்டுவர திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!

இந்த நிலையில் ஒரு நகரில் 20 லட்சம் மக்கள் தொகை இருந்தால் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடியும் எனவும், மதுரை மற்றும் கோவையில் அதற்கு குறைவான மக்கள் தொகை இருப்பதால் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படாது எனவும் மத்திய அரசு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் சில குறைகள் இருப்பதால், அதற்கு தற்போது விளக்கம் மட்டும் கேட்கப்பட்டிருப்பதாகவும் திட்டத்தை நிராகரிக்கவில்லை எனவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் சேவை நிராகரிக்கப்பட்டதற்கான 5 காரணங்கள்

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கிறதா என திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : கூடலூரில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் யானை.. பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு!

  1. இதற்கு பதிலளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் டோகன் சாஹூ, கோவையைப பொறுத்தவரை குறைந்த பயண தூரம் இருப்பதால், அதில் மெட்ரோ ரயில் செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. காரணம், பயண தூரம் குறைவாக இருப்பதால், கோவை மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றார்.
  2. மேலும் பேசிய அவர், மாநகராட்சி பகுதியை விட 5 மடங்கு பெரிதாக உள்ள உள்ளூர் பகுதியில் வசிப்பவர்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவதில்லை.
  3. மேலும், 34 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்படும் நிலையில் பயணிகள் எண்ணிக்கை 5.90 லட்சம் இருக்க வேண்டும். ஆனால், சென்னையில் 55 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட நிலையில் அங்கு சராசரியாக 4 லட்சம் பயணிகள் தான் மெட்ரோவை பயன்படுத்துகிறார்கள்.
  4. மதுரையைப் பொறுத்தவரை ரயில் நிலையங்களை தீர்மானிப்பதிலும், வழித்தடங்கள் அமைக்க இடங்களுக்கான உரிமை பிரச்னை நிலவுவதால், இந்த திட்டங்கள் செயல்படுத்துவதில் சாத்தியமில்லை.
  5. மேலும் மதுரையைப் பொறுத்தவரை செலவு குறைந்த விரைவு பேருந்து வசதிகளை போதுமானது என்பதால் இந்த திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

 

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை