Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு மறுப்பு? உண்மை என்ன?

Metro Rail Projects : கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு மறுப்பு? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Nov 2025 19:00 PM IST

சென்னை, நவம்பர் 18:   கோயம்புத்தூர் (Coimbatore) மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டதாக பரவி வரும் தகவல்கள் தவறானவை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அந்த திட்டங்களுக்கு தொடர்புடைய ஒன்றிய அரசின் கேள்விகளுக்கு தேவையான விளக்கங்களை வழங்கிய பிறகு திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளது.  சமீபத்தில் கோவை, மதுரை (Madurai) ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அறசு நிராகரித்ததாகவும், மோதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் இந்த திட்டம் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சென்னை மெட்ரோ மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு மறுப்பு?

கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவைக்கான கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அங்கு மக்கள் தொகை குறைந்தது 20 லட்சம் இருக்க வேண்டும் எனவும் ஆனால் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் அதற்கும் குறைவாக மக்கள் தொகை இருப்பதால் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்ப்டடுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களான ஆக்ரா, நாக்பூர், புனே, கான்பூர் போன்ற சிறிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சர்ச்சை எழுந்தன. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விதாவதங்களை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : SIR பணிகள் புறக்கணிப்பு.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை..

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இதற்கு விளக்கமளித்துள்ளது. கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான கோரிக்கையை நிராகரிக்கவில்லை எனவும் திட்டம் தொடர்பாக மததிய அரசு சில விளக்கங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளது. திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்த பிறகு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோவின் நிலை

தற்போது சென்னை மெட்ரோ மொத்தம் 54 கிலோ மீட்டர் நெட்வோர் கொண்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் தற்போது மெட்ரோ ரயிலால் பயணித்து வருகின்றனர். தற்போது  சென்னை மெட்ரோ இரண்டாவது கட்டமாக 118 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாதவரம் முதல் சிறுசேரி வரையும், லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 3 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க : சபரிமலைக்கு தமிழகம் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் அதிகாரப்பூர்வமாக தவறானவை எனத் தெரிவித்துள்ள நிலையில், இந்த இரண்டு முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.