வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்.. அதிரடி வழக்குப்பதிவு!

Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிப்காட் காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு மீது போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்.. அதிரடி வழக்குப்பதிவு!

தூத்துக்குடியில் பாலியல் புகாரில் ஏட்டு மீது வழக்கு

Published: 

12 Apr 2026 14:35 PM

 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு காலங்கரை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவரது மனைவி மருத்துவமனையில் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில், கூலித் தொழிலாளி அனுமதிக்கப்பட்டுள்ள அதே வார்டில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் இருந்த அந்த ஏட்டு கூலி தொழிலாளியின் மனைவியிடம் செல்போன் சார்ஜர் இருக்கிறதா என்று கூறி பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண் சார்ஜர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. அத்துடன், அந்த பெண்ணிடம் கேட்டு அநாகரிகமாக பேசியதுடன், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதை எதிர்பாராத அந்த பெண் போலீஸ் ஏட்டுவை கண்டித்துள்ளார்.

தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ் ஏட்டு

அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று அந்த பெண்ணுக்கு போலீஸ் ஏட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து கூலித் தொழிலாளியின் மனைவி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறி கேள்வி கேட்ட காவலரின் மனைவி.. போராட்டக் களமாக மாறிய பரப்புரை

குற்றத்தை ஒப்புக் கொண்ட போலீஸ் ஏட்டு

மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து, போலீஸ் ஏட்டு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவின் பெயர் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

வேலியே பயிரை மேய்ந்த கதை போல…

அரசு மருத்துவமனையில் சீருடையில் இருந்த போலீஸ் ஏட்டு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவில் ஈடுபட்டதும், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறையே சேர்ந்தவர்களே அச்சுறுத்தலாக மாறி இருப்பது, வேலியே பயிரை மேய்ந்த கதை போல இருப்பதாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் படிக்க: எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு யாருக்கு?.. குழப்பத்தில் தவெக தொண்டர்கள்!!

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?